பாத்தாலே பதறுதே.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் பண்ண த்ரில் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா த்ரில்லான வீடியோ ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் தாறுமாறாக பரவி வருகிறது.

பாத்தாலே பதறுதே.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் பண்ண த்ரில் வீடியோ..!

மனிதர்களை போலவே வாய்.. Beach ல கரை ஒதுங்கிய வித்தியாசமான உயிரினம்.. வைரல் புகைப்படம்..!

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Anand Mahindra shares Monday motivation post with amazing video

உத்வேகம்

நம்மில் பெரும்பாலானோருக்கு திங்கட்கிழமை காலை சோகமாக விடிவதுண்டு. விடுமுறையை முடித்து வேலைக்கு செல்லும் ஒவ்வொரு நபருக்கும் திங்கட்கிழமை காலை நிச்சயம் ஒரு Monday motivation தேவைப்படும். அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அதில், "சில சமயங்களில், திங்கட்கிழமை காலை இது போன்ற ஆபத்தானதாக நீங்கள்உணரலாம். ஆனால் நீங்கள் எப்போதும் குன்றின் மேல் இருந்து விழாமல் வாரத்தை பத்திரமாக கடந்து செல்கிறீர்கள். அப்படியே இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

Anand Mahindra shares Monday motivation post with amazing video

வைரல் வீடியோ

மேலும், தனது ட்வீட்டில் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு குழு மலைப் பகுதியில் பயணம் செய்கிறது. லாரி ஒன்றின் மீது அமர்ந்துள்ள அந்த பயணிகள் ஒவ்வொரு முறை லாரி குலுங்கும்போதும் அதற்க்கு ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்கின்றனர். இதனை திங்கட்கிழமை காலையுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

Anand Mahindra shares Monday motivation post with amazing video

த்ரில் பயணம்

இந்த வீடியோ முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு மே  மாதத்தில் சுபயாத்ரா என்னும் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஹர் பள்ளத்தாக்கில் உள்ள மிலாம் பகுதியை அடைய மக்கள் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். மேடு பள்ளமான மலை பாதையில் லாரிகளில் மக்கள் பயணிக்கிறார்கள். சாகச விரும்பிகளும் இந்த பகுதியை தேர்ந்தெடுப்பதை தங்களது வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

சுட்டெரிக்கும் சூரியன்.. பிளக்கும் வெயில்.. 72 வருஷத்துல இப்படி இல்ல.. அதிர்ச்சி ரிப்போர்ட்.. எங்க?

 

ANAND MAHINDRA, MONDAY MOTIVATION, MONDAY MOTIVATION POST, ஆனந்த் மஹிந்திரா

மற்ற செய்திகள்