50 வயசானவங்க இந்த டெஸ்ட்-ல பாஸ் பண்ணவே முடியாதாம்.. ஆனந்த் மஹிந்திராவின் லேட்டஸ்ட் ட்வீட்.. இத வாசிச்சிட்டா நீங்க கில்லாடிதான்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திராவின் லேட்டஸ்ட் ட்வீட் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
டெஸ்ட்
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவில் ஒரு வினாத்தாளின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் அவர். புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவ பள்ளி (School of Psychiatry) இந்த தேர்வை நடத்துகிறது. இதன்மூலம் ஒருவருடைய மனதின் வயதை கண்டறிய முடியும் எனவும் சொல்லப்படுகிறது. அந்த வினாத்தாளில் 50 வயதை கடந்தவர்களால் இந்த தேர்வில் வெற்றிபெற இயலாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், படிப்பதற்கு நம்மை குழப்பும் வகையிலான வாசகங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை வாய்விட்டு படித்து முடிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினாத்தாளின் இறுதியில் "தற்போது ஒவ்வொரு வாக்கியத்திலும் உள்ள மூன்றாவது வார்த்தையை மட்டும் மேலிருந்து கீழாக படிக்கவும்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை தொகுக்கும்போது "This is how to keep an old man busy for forty seconds" (முதியவர்களை 40 வினாடிகள் பிசியாக வைத்திருப்பது இப்படித்தான்) எனப்பொருள் கிடைக்கிறது.
துல்லியமான சோதனை
இந்த வினாத்தாளை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா,"இது ஒரு அற்புதமான துல்லியமான சோதனை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். இதனை ஒரு நண்பர் என்னை எடுக்கும்படி வற்புறுத்தினார். மறுக்க முடியாத முடிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
I have to admit that this was a brilliantly accurate test that a friend urged me to take. Indisputable result. pic.twitter.com/y5yQQiXe2L
— anand mahindra (@anandmahindra) October 1, 2022
மற்ற செய்திகள்