பலமான ‘பாதுகாப்பு’ போல.. இதை பார்த்தா ‘அதான்’ ஞாபகத்துக்கு வருது.. ஆனந்த் மஹிந்திரா ‘அசத்தல்’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சங்கிலியால் கட்டப்பட்ட ஸ்கார்பியோ காரின் புகைப்படத்தை ஊரடங்குடன் ஒப்பிட்டு மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பலமான ‘பாதுகாப்பு’ போல.. இதை பார்த்தா ‘அதான்’ ஞாபகத்துக்கு வருது.. ஆனந்த் மஹிந்திரா ‘அசத்தல்’ ட்வீட்..!

இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. குறிப்பாக நகரங்களில் அதிக அளவிலான கார் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கார்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

Anand Mahindra share picture of Scorpio tied tree with a chain

அப்படி இருக்கையில் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் ஒருவர், பழைய காலத்து டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளார். ஆம், அவர் தனது காரை ஒரு மரத்தில் சங்கிலி மூலம் கட்டி வைத்துள்ளார். இந்த புகைப்படம் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு சென்றது.

உடனே அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர், ‘உயர் தொழில்நுட்ப பொதுமுடக்கம் என்பது சரியான தீர்வு இல்லை என்றாலும், குறைந்தபட்சம் இது உரிமையாளரின் உரிமையை காட்டுகிறது. என்னைப் பொருத்தவரை இந்த படம் ஊரடங்கை நான் எப்படி உணர்ந்தேன் என்பதை காட்டுகிறது. இந்த வார இறுதியில் இந்த சங்கிலியை நான் உடைக்க முயற்சிக்கப் போகிறேன். (முகக்கவசம் அணிந்துகொண்டு)’ என அவர் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்