"Late பண்ணதுக்கு மன்னிச்சுடுங்க.." நெட்டிசனின் கமெண்ட்டிற்கு ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதில்.. வியந்து போன நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
இந்நிலையில், தாமதமாக பதிலளித்ததால் நெட்டிசன் ஒருவருக்கு மன்னிப்பு கேட்டு ஆனந்த் மஹிந்திரா செய்துள்ள ட்வீட், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சுந்தர் ஷெட்டி என்ற நபர் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் பதிவு ஒன்றில், "ஹாய் ஆனந்த் சார். நான் சுந்தர் ஷெட்டி. எனது தந்தை, கடந்த 1965 ஆம் ஆண்டு, கண்டிவாலி பகுதியில் உள்ள மஹிந்திரா தொழிற்சாலையின் கேண்டீனில், டீ விற்பனை செய்பவராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், அவரது திறனை பார்த்து விட்டு, மஹிந்திரா தொழிற்சாலையில் உள்ள அதிகாரி ஒருவர், வெல்டிங் பிரிவில் எனது தந்தைக்கு வேலை ஒன்றையும் கொடுத்தார்" என கொடுத்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனத்தில் உள்ள அதிகாரியின் மூலம், தனது தந்தை டீ விற்பனையாளராக இருந்து பின்னர் பெரிய நிலைக்கு சென்றதை சுந்தர் ஷெட்டி என்ற நபர் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். கடந்த மே மாத இறுதியில், சுந்தர் ஷெட்டி ட்விட்டரில் கமெண்ட் செய்திருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு கவனித்த ஆனந்த் மஹிந்திரா, தற்போது இதற்கு பதிலளித்துள்ளார்.
அவரது பதிலில், "இவ்வளவு தாமதமாக பதிலளித்ததற்கு மன்னிக்கவும். உங்களின் தந்தையை போன்றவர்களின் கதைகள் தான் என்னை தொடர்ந்து வேலை செய்ய தூண்டுகிறது. வாழ்க்கையை மாற்றும் வணிகத்தின் சக்தி மிக முக்கியமானது" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன் ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு ட்வீட் செய்திருந்தாலும் அதனை தற்போது கவனித்த ஆனந்த் மஹிந்திரா, அப்படியே கடந்து செல்லாமல், மன்னிப்பு கேட்டு பதிலுக்கு ட்வீட் செய்துள்ள சம்பவம், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Also Read | ரோடு மேல இருந்த பெரிய குழி.. வியந்து போய் ஆனந்த் மஹிந்திரா கொடுத்த ரியாக்ஷன்.. "அப்படி என்ன அதுல இருக்கு??"
மற்ற செய்திகள்