RRR Others USA

மீன் பிடிக்க இப்படி ஒரு ஐடியாவா?.. சிறுவனை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிறுவன் ஒருவனது மீன் பிடிக்கும் திறமையை கண்டு பாராட்டி உள்ளார் இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா. தற்போது அந்த மீன்பிடி வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மீன் பிடிக்க இப்படி ஒரு ஐடியாவா?.. சிறுவனை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரல் வீடியோ..!

இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கு வந்ததில்லை.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா.. விற்பனையாளர்களின் BP-யை எகிறவைக்கும் வெள்ளை நிற வைரம்..!

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கிவருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Anand Mahindra Praises boy fishing technique

மீன்பிடி டெக்னிக்

இந்நிலையில், சிறுவன் ஒருவன் புதுவகையாக மீன்பிடிக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன், ஸ்டான்ட் போன்ற ஒன்றை நீர்நிலைக்கு அருகில் வைக்கிறான். தரையில் அதன் இரு கால்களையும் அழுத்தி நிலைபெற செய்துவிட்டு, அதில் சுருட்டி வைக்கப்பட்ட மீன்பிடி நரம்பில் இரையை மாட்டி தண்ணீரில் வீசுகிறான். சிறிது நேரத்தில் அந்த ஸ்டான்ட் அசைவதை அறிந்துகொண்ட சிறுவன், நரம்பினை பிடித்தது இழுப்பதற்கு பதிலாக ஸ்டான்ட்டின் பக்கத்தில் இருக்கும் உருளையை சுற்ற மீன்கள் வெளியே வருகின்றன.

இப்படி இரண்டு பெரிய மீன்களை அந்த சிறுவன் பிடித்து கூடைக்குள் அடைக்கிறான். இந்த வீடியோவை இதுவரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர்.

Anand Mahindra Praises boy fishing technique

வெற்றி

சிறுவன் நூதனமான முறையில் மீன்பிடிக்கும் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ  டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"இது எனது இன்பாக்ஸிற்கு இந்த வீடியோவை அனுப்பியுள்ளார் ஒருவர். ஒரு சிறந்த குறுங்கதை உண்டு. உறுதி + புத்தி கூர்மை + பொறுமை = வெற்றி என்பதுதான் அது" என குறிப்பிட்டுள்ளார்.

Anand Mahindra Praises boy fishing technique

ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், சிறுவயதில் திறமையாக மீன்பிடிக்கும் சிறுவனையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

2.2 கோடிக்கு ஏலம்போன பிரபல ராப் பாடகரின் லவ் லெட்டர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

 

ANAND MAHINDRA, PRAISES, FISHING TECHNIQUE, BOY, BOY FISHING TECHNIQUE, ஆனந்த் மஹிந்திரா, சிறுவன், மீன்பிடி டெக்னிக்

மற்ற செய்திகள்