Fact check : ஆனந்த் மஹிந்த்ரா பகிர்ந்த வீடியோ.. ‘ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை இளம்பெண் வரைவது உண்மையா..?’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Fact check : ஆனந்த் மஹிந்த்ரா பகிர்ந்த வீடியோ.. ‘ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை இளம்பெண் வரைவது உண்மையா..?’

Also Read | பெங்களூவில் மசால் தோசை சாப்பிடும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.. வைரலாகும் புகைப்படம்.. !

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Anand Mahindra offered help to artist who paints 15 portraits at the s

இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இளம்பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 15 தேச தலைவர்களின் ஓவியத்தை வரைகிறார். நூர்ஜஹான் எனும் பெயருடன் தோன்றுவதாக கூறப்படும் அந்த இளம்பெண் மரச் சட்டங்களில் பேனாக்களை வைத்து கட்டுகிறார். இப்படி 15 பேனாக்களை கொண்டு 15 தலைவர்களின் ஓவியத்தை வரைகிறார். அதில், மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், பகத்சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட தலைவர்களின் முகங்களை தத்ரூபமாக வரைகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்து,"இது எப்படி சாத்தியம்?? அவர் ஒரு திறமையான கலைஞர் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலையை விட சற்றே அதிகம் - இது ஒரு அதிசயம்! அவருக்கு அருகில் வசிக்கும் யாராவது இந்த சாதனையை உறுதிப்படுத்த முடியுமா? இது உண்மை என்றால், அவர் ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், அவருக்கான உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

Anand Mahindra offered help to artist who paints 15 portraits at the s

இந்த வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டும் வருகிறது. அதேநேரத்தில் சிலர் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது சாத்தியம் இல்லாதது எனவும், ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டுள்ள பேனாக்களை கொண்டு, வெவ்வேறான நபர்களின் உருவங்களை எப்படிவரைய முடியும்? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் பெரும்பாலானோர், இது பொய்யான செய்தியாக (fake story) ஆக இருக்கலாம் என்றும் கமெண்ட் செய்துவருகின்றனர். அத்துடன் நாங்களும் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கிறோம். மேலும் இந்த நிகழ்வு ‘உலக கின்னஸ் சாதனையில்’ இடம் பெற்றுள்ளதாக வலம் வரும் செய்திகளும் தகவல்களும் கூட உண்மை அல்ல, அது ஒரு false claim ஆக இருக்கலாம் என்று தெரியவருகிறது.

Also Read | ஷாப்பிங் மாலுக்கு நடுவே இருந்த ரகசிய அறை.. யாருக்கும் தெரியாம வருஷ கணக்கில் தங்கியிருந்த நபர்.. அவங்க போட்ட பிளான் இருக்கே..!

ANAND MAHINDRA, HELP, ARTIST, PAINT, PORTRAITS

மற்ற செய்திகள்