"சில சமயங்கள்ல நாமும் இந்தமாதிரி முடிவை எடுக்கணும்".. தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் மூலமாக ஆனந்த் மஹிந்திரா சொன்ன மேசேஜ்.. !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, நொய்டாவில் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் குறித்து வித்தியாசமான கோணத்தில் பதிவிட்ட ட்வீட் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

"சில சமயங்கள்ல நாமும் இந்தமாதிரி முடிவை எடுக்கணும்".. தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் மூலமாக ஆனந்த் மஹிந்திரா சொன்ன மேசேஜ்.. !

Also Read | ஆமா இங்க இருந்த டவர் எங்க..? ஆபிசர் போல வந்தவர்களின் உலகமகா உருட்டை நம்பிய வீட்டுக்காரர்.. கடைசியில் தெரியவந்த உண்மை..!

வழக்கமாக 'Monday motivation' என்ற ஹேஷ்டாக்கில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் உத்வேகம் அளிக்கக் கூடிய பதிவுகளை அல்லது புகைப்படங்களை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நொய்டாவில் நேற்று இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்களை ஈகோவுடன் ஒப்பிட்டு ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட் நெட்டிசன்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Anand Mahindra Monday motivation Noida Twin Tower demolition

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இரட்டை கோபுரம்

நொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருந்த இந்த சூப்பர் டெக் இரட்டை கட்டிம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, நேற்று மதியம் 2.30 மணிக்கு இந்த கட்டிடம் 3700 கிலோ வெடிமருந்தின் துணையோடு இடிக்கப்பட்டது. 100 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன.

Anand Mahindra Monday motivation Noida Twin Tower demolition

ஈகோ

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,"நொய்டா இரட்டை கோபுரங்களை இடித்ததை #MondayMotivation க்காக நான் ஏன் பயன்படுத்துகிறேன்? ஏனென்றால், நமது ஈகோவை மிக உயரமாக வளர விடுவதால் ஏற்படும் ஆபத்துகளை இது எனக்கு நினைவூட்டுகிறது. அதிகப்படியான ஈகோவை தகர்க்க சில நேரங்களில் நமக்கு வெடிபொருட்கள் தேவைப்படுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read | "உள்ள போனவங்க யாரும் உயிரோட வெளியே வந்தது கிடையாது".. 100 வருடங்களுக்கு மேலாக தொடரும் மர்மம்.. உறையவைக்கும் பின்னணி..!

ANAND MAHINDRA, NOIDA, TWIN TOWER, NOIDA TWIN TOWER, NOIDA TWIN TOWER DEMOLITION, ANAND MAHINDRA MONDAY MOTIVATION

மற்ற செய்திகள்