"இதுதான் சார் எங்க இந்தியா".. துருக்கியில் இந்திய பெண் ராணுவ அதிகாரியின் துணிச்சலான செயல்.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் இந்திய ராணுவ குழுவினர் மிட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீரர்களை இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு..!
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த வார திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 35000 ஐ கடந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன. அதன்படி மீட்புக் குழு, மருத்துவ குழு ஆகியவற்றை இந்தியா 'ஆப்பரேஷன் தோஸ்த்' எனும் பெயரில் அனுப்பியுள்ளது. இதுவரையில் 7 விமானங்களில் மீட்புப் படை, மோப்ப நாய் பிரிவு, நிவாரண பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை இந்தியா துருக்கிக்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா துருக்கியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்களை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியுடன் இந்திய ராணுவத்தை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில்,"நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் இஸ்கெண்டருனில் இந்திய ராணுவத்தால் திறக்கப்பட்ட மருத்துவமனையில் மீட்கப்பட்ட சிறுமியுடன் மேஜர் பினா திவாரி. உலகின் மிகப்பெரிய ராணுவ படைகளில் ஒன்று எங்களிடம் உள்ளது. அவர்கள் மீட்பு மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பல தசாப்தங்களாக அனுபவம் பெற்றவர்கள். இதுதான் இந்தியாவின் உலகளாவிய பிம்பமாக இருக்க முடியும் மற்றும் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவு நெட்டிசன்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
Major Bina Tiwari with a rescued girl in the Hospital opened by the Indian Army in Iskenderun.
We have one of the largest armies in the world. They have decades of experience in rescue & peacekeeping operations. This can, & should be, the global image of India. #TurkeyEarthquake pic.twitter.com/ego2HyH0b2
— anand mahindra (@anandmahindra) February 14, 2023
மற்ற செய்திகள்