10, 000 கோடி ரூபாய் முதலீட்டில் களமிறங்கும் ஆனந்த் மஹிந்திரா.. அமையும் பிரம்மாண்ட தொழிற்சாலை! எங்கே? எதுக்கு? முழு தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் தீவிரமாக இயங்கி வரும் அதே வேளையில், ட்விட்டர் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவ் ஆக இருக்கக் கூடியவர்.
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இதன் காரணமாக, ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக ஆனந்த் மஹிந்திரா பகிரும் ட்வீட்கள் அல்லது கருத்துக்கள், அதிகம் இணையத்தில் பரவலாக இருந்து வரும். இந்த நிலையில், ஆனந்த் மஹிந்திராவின் மஹிந்திரா நிறுவனம் அடுத்து ஆரம்பிக்க போகும் தொழிற்சாலை குறித்த செய்தி, பலரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் மிகவும் முனைப்பு காட்டி புதிய புதிய வாகனங்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் தற்போது மஹிந்திரா நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கக்கூடிய பிரம்மாண்டமான தொழிற்சாலையை புனேவில் அவர்கள் உருவாக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொழிற்சாலைக்காக அவர்கள் முதலீடு செய்ய உள்ள பணத்தின் தொகை எவ்வளவு என்பது தான் தற்போது பலரையும் மலைக்க வைத்துள்ளது. அதாவது சுமார் 10,000 கோடி ரூபாய் செலவில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அவர்கள் புனேவில் தொடங்க உள்ள நிலையில், நிச்சயம் இது ஒரு மிகப்பெரிய பிரமாண்ட திட்டமாக தான் இருக்கும் என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இங்கிலாந்தில் நடந்த கண்காட்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கார் தான் தற்போது புனேவில் உருவாக உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் பெரிய அளவில் புகழ்பெற்று விளங்கும் நிலையில் தற்போது எலக்ட்ரிக் காருக்காக மிக பிரம்மாண்டமாக தொழிற்சாலை துவங்கி, அதனை உற்பத்தி செய்ய உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் போட்டுள்ள திட்டம், தற்போது பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்