"ரொம்ப யோசிக்காதீங்க.. இதை மட்டும் செய்யுங்க".. அதிகமாக யோசிப்பவர்களுக்கு ஆனந்த் மஹிந்திராவின் அடடே அட்வைஸ்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அட்வைஸ்
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் லண்டனை சேர்ந்த தீயணைப்பு வீரரான ரிக்கி நட்டால் அதிகமாக யோசிப்பவர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். Post-traumatic stress disorder (PTSD) -ஆல் பாதிக்கப்பட்ட ரிக்கி அந்த வீடியோவில் தனக்கு பிடித்த புத்தகம் 'தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்' (சார்லி மெக்கேசியால் எழுதப்பட்டது) எனக் குறிப்பிடுகிறார். அதில் வரும் ஒரு கருத்து தன்னை ஆழமாக ஈர்த்துவிட்டதாக ரிக்கி குறிப்பிடுகிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில்," அந்த புத்தகத்தில் சிறுவன் ஒருவருடன் குதிரை உரையாடும். அந்த பகுதியில், தன்னால் வெகுதூரம் பார்க்க முடியவில்லை என சிறுவன் கூறுவான். அதற்கு அடுத்த அடியை உன்னால் பார்க்க முடிகிறதா? என குதிரை கேள்வி எழுப்பும். அதற்கு அந்த சிறுவன் ஆம் என்பான். அப்படியென்றால் அடுத்த அடியை எடுத்துவை என குதிரை சொல்லும். நாம் எப்போதும் நம்முடைய இலக்கை மட்டுமே பார்க்க கூடாது. இலக்கை நோக்கிய நம்முடைய பாதையை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த அடிகளை சரியாக வைத்தாலே போதுமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும்
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, "நிகழ்காலத்தில் வாழுங்கள். குறிப்பாக தற்காலிக சவால்களை எதிர்கொள்ளும் போது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாக எடுத்து வையுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Live in the present. Especially when facing temporary challenges. One day at a time; one step at a time… pic.twitter.com/Uhm9mtrfGj
— anand mahindra (@anandmahindra) September 22, 2022
Also Read | விமானத்தில் இருந்து கிளம்பிய தீப்பொறி.. உடனடியா தரையிறக்கப்பட்ட விமானம்.. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்