'Love தான் சார் என் வாழ்க்கையை மாத்துச்சு'... 'ஆட்டோ டிரைவர் to பிரான்ஸ்'... இளைஞரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட காதல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதல் ஒருவரை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது இந்த இளைஞரின் காதல்.
இந்தியாவின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் ராஜ், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராஜ்-ஜை அவரது குடும்பத்தினர் பள்ளியில் சேர்த்துள்ளனர். ஆனால் படிப்பில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் 10ம் வகுப்பில் தோல்வியுற்றார். பின்னர் தனது 16 வயதில் ஆட்டோ ஓட்ட தொடங்கியுள்ளார்.
சில ஆண்டுகள் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கை நகர, மற்ற ஓட்டுநர்கள் எல்லாம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற வேறு மொழிகளைப் பேசியதால் ராஜ்-க்கும் மற்ற மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. தொடர்ந்து மெல்ல மெல்ல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்களுடைய அழகிய நகரைச் சுற்றிக்காண்பிக்கும் Tourist Guideஆக பணிபுரியத் தொடங்கினார்.
அந்த Tourist Guide வேலை தான் தனது வருங்கால மனைவியைத் தனது கண்முன்பே கொண்டு வந்து நிறுத்தும் என ராஜ் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். பிரான்ஸைச் சேர்ந்த அவர், தனது தோழிகளுடன் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தார். அப்போது City Palaceல் இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில், ராஜ் அவர்களுக்கு ஜெய்ப்பூரைச் சுற்றிக் காண்பித்துள்ளார்.
பின்னர் அவர் சுற்றுலா முடிந்ததும் தாய் நாட்டிற்குச் சென்று விட Skypeல் இருவரும் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாற ராஜ் பிரான்ஸ் செல்வதற்காகப் பலமுறை விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு விசா மறுக்கப்படவே, ராஜ்யின் காதலி அவருக்காக பிரான்ஸிலிருந்து இந்தியா வந்துள்ளார்.
ஒருவழியாகத் தூதரக அதிகாரிகள் ராஜுக்கு விசா வழங்கிய நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் குழந்தைகள் பிறந்தது. அடுத்ததாக, நீண்ட கால பிரெஞ்சு விசாவுக்கு விண்ணப்பித்த நிலையில் பிரஞ்சு மொழியை கற்று கொண்டதால் அவருக்கு விசாவும் கிடைத்தது.
தற்போது இருவரும் மகிழ்ச்சியாக ஜெனீவாவில் வசித்து வரும் நிலையில், அங்குள்ள உணவகத்தில் ராஜ் வேலை பார்த்துக் கொண்டே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சொந்தமாக உணவகம் தொடங்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு என கூறும் ராஜ்யின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியுள்ளது காதல் என்ற மூன்றெழுத்து.
மற்ற செய்திகள்