'அவசர காலத்துக்கு ரொம்ப பயன்படும்'... 'விற்பனைக்கு வரும் 2டிஜி கொரோனா மருந்து'... இதை எப்படி பயன்படுத்துவது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு 2டிஜி கொரோனா மருந்து விற்பனைக்கு வந்துள்ளது.

'அவசர காலத்துக்கு ரொம்ப பயன்படும்'... 'விற்பனைக்கு வரும் 2டிஜி கொரோனா மருந்து'... இதை எப்படி பயன்படுத்துவது?

கொரோனாவின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இரு ஒருபுறம் இருக்க டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்து டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன. இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 

10,000 Packets Of DRDO's Anti-Covid Oral Drug To Be Distributed

இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கொரோனா நோயாளிகளிடம் நடத்தினர். 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடந்து வெற்றியாக அமைந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை 2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கோவிட் மருத்துவமனைகளில் உள்ள 220 கொரோனா நோயாளிகள் மீது பரிசோதிக்கப்பட்டது. இந்த 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகள் அனைத்தும் டிசிஜிஐ அமைப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து கொரோனா நோயாளிகளுக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது.

10,000 Packets Of DRDO's Anti-Covid Oral Drug To Be Distributed

ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது, ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் நோயாளிகள் விரைவில் இல்லாமல் மீள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசரக் காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பவுடர் வடிவில் இருக்கும் இந்த மருந்தை நோயாளிகள் தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும்.

மற்ற செய்திகள்