"Traffic-னால 3% Divorce நடக்குது".. Maharashtra Ex CM மனைவி.. "என்னா ஒரு லாஜிக்" .. வித்தியாசமான விருது அறிவித்த சிவசேனா

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா:  முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ். மனைவி அம்ருதா பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"Traffic-னால 3% Divorce நடக்குது".. Maharashtra Ex CM மனைவி.. "என்னா ஒரு லாஜிக்" .. வித்தியாசமான விருது அறிவித்த சிவசேனா

கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில் பாஜக, சிவசேனா கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தது. அப்போதிலிருந்தே பாஜகவும், சிவசேனாவும் எதிரும் புதிருமாக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே உடல்நலக்குறைவால் நீண்டநாட்களாக உத்தவ் தாக்கரே பொதுவெளியில் வராமல் இருப்பதையும் பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.

பாஜக - சிவசேனா மோதல்

இந்நிலையில்,  தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவிலுள்ள சிவசேனா கூட்டணி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறார்.  அதேசமயம், கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தை பா.ஜ.க தலைவர்கள் பதுக்கி வைத்துக்கொண்டு செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. இந்நிலையில், சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரேவின், 96வது பிறந்த நாளை ஒட்டி, இணையவழியில் நடைபெற்ற விழாவில் உத்தவ் தாக்கரே பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

25 ஆண்டுகள் வீண்

அதில் அவர் கூறியதாவது, "பாஜகவின் சந்தர்ப்பவாத இந்துத்துவம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். சிவசேனா 25 ஆண்டுகளை பாஜகவுடன் கூட்டணி வைத்து வீணடித்து விட்டது. அவர்கள் தேசிய அளவில் செயல்பட நாங்கள் எங்கள் மண்ணில் இயங்குவோம் என நம்பினோம். ஆனால் அவர்கள் எங்களுக்குத் துரோகம் செய்தனர்" என்று கூறினார். இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் அம்ருதா செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3% விவகாரத்து

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மும்பையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 விழுக்காடு விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன். நான் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி என்பதை மறந்துவிட்டு, ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். போக்குவரத்து நெரிசல் எவ்வாறு நம்மை தொந்தரவு செய்கின்றன என்பதை நான் அனுபவித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

சிறந்த லாஜிக் விருது

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, "3 சதவீத மும்பைவாசிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய பெண்ணுக்கு இந்நாளின் சிறந்த லாஜிக் விருது வழங்கப்படுகிறது. குடும்பங்கள் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும். இது உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்" என சிரிப்பு எமோஜியுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

SHIVSENA, MP PRIYANKA CHADURVETI, AMRUTA FADNAVIS, EX CM DEVANDRA FADNAVIS, PRESS MEET, MUMBAI, TRAFFIC

மற்ற செய்திகள்