“சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டும் இவ்வளவு செலவா”?.. எந்த கட்சி டாப் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவைத் தேர்தல் விளம்பரங்களுக்காக அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் மட்டும் 53 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

“சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டும் இவ்வளவு செலவா”?.. எந்த கட்சி டாப் தெரியுமா?

மக்களவைத் தேர்தலுக்காக கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 15 ஆம் தேதி வரையிலான காலங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி விளம்பரங்களுக்காக சமூக வலைதளங்களில் மட்டும் 53 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. இதில், மொத்தமாக 1 லட்சத்து 36 ஆயிரம் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளும் கட்சியான பாஜக  ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்காக 4 கோடியே 23 லட்சமும், கூகுளில் 17 கோடி ரூபாயும் செலவுசெய்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, எதிர்கட்சியான காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் 1 கோடியே 46 லட்சமும், கூகுளில் 2 கோடியே 71 லட்சமும் செலவு செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதேபோல் மாநில கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் 29.28 லட்சம் ரூபாயும். ஆம் ஆத்மி கட்சி ஃபேஸ்புக்கில் 13.62 லட்சமும், கூகுளில் 2.18 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது.