1945-ல் மாயமான விமானம்.. இத்தனை வருஷமா 'இங்க' தான் கெடந்துச்சா? வியக்க வைக்கும் ஆச்சரியம்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டாம் உலகப்போரில் விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் ஒன்று இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1939-45 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் ஜப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் ஜப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானது:
இந்த போரில் அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்தியா, சீனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் விழுந்து காணாமல் போனது. அதில் ஒரு விமானம் சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானது.
இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம்:
பல நாட்கள் தேடிய போதும் மாயமான விமானம் எங்கு போனது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. அந்நேரத்தில் இருந்த மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேச இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என செய்தியும் வெளியாகியது.
இந்நிலையில், 1945ஆம் ஆண்டு மாயமாகிய விமானத்தை தேடி அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகன் இறங்கினார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த இளைஞர், விமான தேடுதல் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.
குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம்:
அந்த குழுவும், பில் ஸ்கேரும் குக்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பல மாத தேடுதலுக்கு பயனாக பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு நேற்று கண்டுபிடித்தது. பனி சூழ்ந்த பாறையின் நடுவே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குக்லெஸ் தெரிவித்துள்ளார். விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை:
இந்த சம்பவம் குறித்து கிளேட்டன் குக்லெஸ் கூறுகையில், 'கடுமையான முயற்சிக்கு தற்போது மாயமான விமானம் கண்டுபடிக்கப்பட்டுள்ளது. சிதைந்த நிலையில் காணப்படும் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை' எனக் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் போது காணமல் போம் போர் விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்