'அசத்தலான' கேஷ் பேக் 'ஆஃபர்களுடன்' இந்தியாவில் ‘இந்த’ வசதியுடன் ‘அதிரடியாக’ இணைகிறது அமேசான்!.. ‘முழு விபரம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐஆர்சிடிசி என்கிற இந்திய ரயில்வேயின் நிறுவனமானது ஈ-காமர்ஸ் நிறுவனமான "அமேசான் இந்தியா"வுடனான தமது கூட்டணி குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இதனால் அமேசான் தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி அனுமதிக்கிறது.
அமேசான் இந்தியாவின் இந்த புதிய வசதியின் மூலம், வாடிக்கையாளர்கள் ரயிலில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் இருக்கை மற்றும் ஒதுக்கீடு கிடைப்பதை சரிபார்த்துக் கொள்வதற்கும், டிக்கெட்டுகளுக்கு பிஎன்ஆர் நிலையை நேரடியாக சரிபார்க்கவும் முடியும். டிக்கெட் புக் செய்து பணம் செலுத்திக்கொள்ள, அமேசான் பே பேலன்ஸ் வாலட்டில் பணத்தை சேர்க்கலாம். அத்துடன் அமேசானில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யவும், அதனை ரத்து செய்யவும் முடியும். Amazon Pay Balance-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தினால், டிக்கெட்டுகளை ரத்து செய்தலோ அல்லது முன்பதிவுகள் தோல்வி ஏற்பட்டாலோ உடனடியாக பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல், அமேசான் பே, கேஷ்பேக் சலுகைகளும் இதில் உள்ளன. வாடிக்கையாளர் தங்கள் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் 10 சதவீதம் வரை, அதாவது 100 ரூபாய் வரை கேஷ்பேக்கை பெற முடியும். அமேசான் பிரைம் உறுப்பினர்கள் தங்கள் முதல் முன்பதிவுகளுக்கு 12% கேஷ்பேக் வரை, அதாவது 120 ரூபாய் வரை பெற முடியும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும் என்பதுடன் தொடக்க காலத்தில், Amazon.in சேவை மற்றும் கட்டண நுழைவாயில் பரிவர்த்தனையில் கட்டண தள்ளுபடியும் இதில் கிடைக்கும்.
விமானங்கள், பஸ் மற்றும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான one-stop-shop ஆப்பாக அமைந்துள்ள இதனை, Android மற்றும் iOS மொபைல் பயனர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இது குறித்து பேசிய அமேசான் பே நிறுவனத்தின் இயக்குனர் விகாஸ் பன்சால், ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து பணியாற்றுவதில் தங்கள் நிறுவனம் உற்சாகமாக இருப்பதாகவும், கடந்த ஆண்டு அமேசான் பே விமானங்கள் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவுகளை அறிமுகப்படுத்திய நிலையில், அதன் சமீபத்திய வளர்ச்சி பயனாளர்களுக்கான பயன்பாட்டை மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்