பண்டிகை காலம்... தூள் கிளப்பும் ஆன்லைன் வர்த்தகம்!.. வெறும் 4 நாளில்... இத்தனை கோடிகளா!? அமேசான், ஃபிளிப்கார்ட் அதிரடி திட்டம்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான், ஃபிளிப்கார்ட்டில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஆன்லைன் உட்பட அனைத்து இடங்களிலும் வியாபாரம் மந்தமாக இருந்தது. கடந்த 2 மாதங்களாக ஊரடங்குத் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை அறிவித்திருந்தன.
இந்த ஆஃபரின் மூலம் வாடிக்கையாளர்கள் பல மடங்கு குவியலாம் என அந்நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்லனைனில் பொருட்களை ஆர்டர் செய்து அள்ளிச்சென்றுள்ளனர். கடந்த 4.5 நாட்களில் மட்டும் இந்தியாவிலிருந்து மொத்தம் ரூ.22,000 கோடிக்கு ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது.
இந்த விற்பனை கடந்த ஆண்டைவிட 75% அதிகம் என ஆன்லைன் வர்த்தக ஆய்வறிக்கைகள் தெரிவித்திருக்கின்றன. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பண்டிகை காலத்திற்கான ஒரு மாத இலக்காக 7 பில்லியன் டாலரை நிர்ணயம் செய்திருந்தன.
ஆனால் 4.5 நாட்களிலேயே 4 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை நடந்திருக்கிறது. இதனால் இனிவரும் நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த 7 பில்லியன் டாலரைக் கடந்து விற்பனை நடைபெறும் என்பது தெரியவந்திருக்கிறது.
மற்ற செய்திகள்