'ஆர்டர் பண்ணியது கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ...' 'ஆன வந்தது வேற புக்...' படிக்க ஆர்வமா பார்சல் பிரிச்சவருக்கு பயங்கர ஷாக்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆன்லைனில் வாங்கும் முறை அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் விற்பனையில் முன்னணி நிறுவனமான அமேசான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு சர்ச்சையில் சிக்கியது. கவுதம் என்பவர் 300 ரூபாய் மதிப்புள்ள ஸ்கின் லோஷன் ஆர்டர் செய்ததற்கு தவறுதலாக அவருக்கு 19,000 ரூபாய் பாதிப்புள்ள போஸ் ஹெட்போன் டெலிவரி செய்தது.
இந்நிலையில் தற்போது சுதிர்த்தோ தாஸ் என்னும் கொல்கத்தாவை சேர்ந்த நபர் அமேசானில் கம்யூனிஸ்ட் அறிக்கைகள் என்ற புத்தகத்தை ஆர்டர் செய்துள்ளார். சுதிர்த்தோ தாஸ் வீட்டில் இல்லாத சமயம் ஆர்டர் செய்த புத்தக பார்சல் டெலிவரிக்கு வந்ததால் வீட்டில் உள்ள மற்றொரு நபரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
பின்னர் படிப்பதற்காக ஆவலாக பார்சலை செய்த சுதிர்த்தோ தாஸ், ஆர்டர் செய்த கம்யூனிஸ்ட் அறிக்கைகள் புத்தகத்திற்கு பதிலாக பகவத்கீதை புத்தகம் இருந்துள்ளது. இதனை பார்த்த சுதிர்த்தோ தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஆர்டர் செய்த புத்தகத்தின் ஸ்கிரீன்ஷாட் போட்டோவையும் தனக்கு வந்த பகவத்கீதை போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு ஒருவர் ஆர்டர் செய்யும் பொருளுக்கு பதிலாக வேறொன்றை அனுப்பி அமேசான் பல சர்ச்சைகளை தற்போது எதிர்கொண்டு வருகிறது.
மற்ற செய்திகள்