"30 வயசு ஆகிடுச்சு".. ரன்பீர் கபூருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா பட்! Birthday Dress மட்டும் இத்தனை லட்ச ரூபாயா?!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட் நடிகை ஆலியா பட்  பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

"30 வயசு ஆகிடுச்சு".. ரன்பீர் கபூருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா பட்! Birthday Dress மட்டும் இத்தனை லட்ச ரூபாயா?!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!

ஆலியா பட், பாலிவுட்டின் முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற படங்கள் இவரை பாலிவுட்டில் முக்கிய கதாநாயகியாக உருமாற்றம் செய்தது. கடந்தாண்டு இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Alia Bhatt Celebrated Her Birthday with Ranbir Kapoor

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் RRR படத்திலும், டார்லிங், பிரம்மாஸ்திரா படங்களிலும் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட் தற்போது ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

Alia Bhatt Celebrated Her Birthday with Ranbir Kapoor

Images are subject to © copyright to their respective owners.

இச்சூழலில் நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி  ஆலியா பட்டுக்கு, பெண் குழந்தை  பிறந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு ஆலியா பட் & ரன்பீர் கபூர் இணைத்து ராஹா என பெயர் சூட்டினர்.

Alia Bhatt Celebrated Her Birthday with Ranbir Kapoor

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை ஆலியா பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமது 30-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கணவர் ரன்பீர் கபூருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Alia Bhatt Celebrated Her Birthday with Ranbir Kapoor

Images are subject to © copyright to their respective owners.

உறவினர்கள் உடன் ஊர் சுற்றும் புகைப்படங்கள் & உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா பட் பகிர்ந்துள்ளார்.

Alia Bhatt Celebrated Her Birthday with Ranbir Kapoor

Images are subject to © copyright to their respective owners.

மேலும் ஆலியா பட், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அணிந்த சுவெட்டர் உடையின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 1,45,000 ரூபாய் மதிப்புடையது என்ற தகவலும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | ஒரு வாரமா பாசமா வளர்த்த யானைக்குட்டி.. பிரிஞ்சு போற நேரத்துல கண்ணீர்விட்ட அதிகாரி.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ALIA BHATT, ALIA BHATT BIRTHDAY CELEBREATION, RANBIR KAPOOR

மற்ற செய்திகள்