"மொத்த தியேட்டரையும் 'புக்' பண்ணு..." "படத்தை பாக்குறோம்... பட்டைய கிளப்புறோம்..." தீபிகாவுக்கு 'அகிலேஷ்' அதிரடி ஆதரவு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது சப்பக் திரைப்படத்துக்கு பேராதரவு தர ஒரு தியேட்டரை முன்பதிவு செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"மொத்த தியேட்டரையும் 'புக்' பண்ணு..." "படத்தை பாக்குறோம்... பட்டைய கிளப்புறோம்..." தீபிகாவுக்கு 'அகிலேஷ்' அதிரடி ஆதரவு

சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தீபிகாபடுகோன் தெரிவித்தார்.

இதனால், ட்விட்டரில் பலரும் தீபிகா படுகோனுக்கு ஒருபக்கம் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். ஆனாலும், பாஜக ஆதரவாளர்கள் பலர் தீபிகாவின் ’சப்பக்’ திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  முன்பதிவு செய்திருந்த திரைப்பட டிக்கெட்டுகளையும் கிழித்து எறிவது போன்றும் வீடியோ வெளியிட்டனர்.

இத்தகைய சூழலில் நடிகை தீபிகாவின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது சப்பக் திரைப்படத்துக்கு பேராதரவு தர லக்னோவில் ஒரு தியேட்டரை முன்பதிவு செய்துள்ளார் அகிலேஷ் யாதவ். அங்கு தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து படத்தைக் காண திட்டமிட்டுள்ளார். இதேபோல், தீபிகாவுக்கு ஆதரவாக மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் ’சப்பக்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளார்.

DEEPIKA, AKILESH YADAV, LUCKNOW, KAMALNATH, THEATER