'என் பொண்ண இப்படி பண்ணிட்டானே'... 'அப்பவே இத செஞ்சிருக்கணும்'... தாய் பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை அதிரவைத்த பெண் காவலர் சவும்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது தாய் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மாவேலிக்கரையில் உள்ள வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா.இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இதனிடையே நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, சவுமியா பைக்கின் மீது கார் ஒன்று மோதியது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சுதாரிப்பதற்குள், அவரை அரிவாளால் வெட்டிய இளைஞர் ஒருவர்,அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
சவுமியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர்,தப்பி ஓட முயன்ற அந்த இளைஞரை விரட்டி பிடித்தனர்.ஆனால் சவுமியா உடல் முழுவதும் எரிந்து சடலமானார்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், ஆலுவா காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் அஜாஸ் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் உயிரிழந்த சவும்யாவின் தாய் இந்திரா வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மலையாள பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ''அஜாஸ் எனது மகள் சவுமியாவிற்கு செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமில்லை.அவன் எனது மகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தான்.அவனது தொல்லை தாங்க முடியாமல் போனில் அவனது நம்பரை பிளாக் செய்து வைத்தோம்.இதனால் கோபமான அஜாஸ், எங்கள் வீட்டிற்கே வந்து பயங்கரமாக பிரச்னை செய்தான்.அப்போது கூட அஜாஸ், சவும்யா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தான்.
இதனிடையே ''தனது உயிருக்கு ஏதும் ஆபத்தென்றால், அதற்கு காரணம் அஜாஸ்தான்'' என சவுமியாவின் மூத்த மகனிடம் கூறி வைத்துள்ளார்.முன்னதாக அஜாஸின் தொந்தரவு பற்றி, எர்ணாகுளம் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபுவிடம் சவும்யா இரண்டு மாதத்துக்கு முன் தெரிவித்துள்ளார். அவர், இதைப் புகாராக எழுதி தரும்படி கேட்டுக்கொள்ளார். ஆனால், சவும்யா புகார் கொடுக்கவில்லை. அப்படி புகார் கொடுத்திருந்தால் எனது மகள் இப்பொது உயிரோடு இருந்திருப்பாள்'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.