'2016ல் மிஸ் இந்தியா பைனலிஸ்ட்'... 'இன்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி'... 'ஒரு மாடல், ரோல் மாடல் ஆன கதை'... சாதித்த ஐஸ்வர்யா குறித்த பின்னணி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐஸ்வர்யா ஷெரன் ட்விட்டரில் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர். அதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா ஒரு மாடலாக இருந்து, இன்று தனது வெகுநாள் கனவான ஐஏஎஸ் என்ற இடத்தை எட்டிப்பிடித்துள்ளார்.

'2016ல் மிஸ் இந்தியா பைனலிஸ்ட்'... 'இன்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி'... 'ஒரு மாடல், ரோல் மாடல் ஆன கதை'... சாதித்த ஐஸ்வர்யா குறித்த பின்னணி தகவல்கள்!

மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் நடந்தும் யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுகள் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். இந்நிலையில் அகில இந்திய அளவில் 93வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ஷெரன் என்ற இளம்பெண். மாடலிங் துறையில் சாதித்த இளம் பெண் இன்று யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்தது எப்படி.

Aishwarya Sheoran, Miss India 2016 finalist, on cracking Civil Service

ஐஸ்வர்யா ராயைப் பார்த்து தனக்கு ஐஸ்வர்யா என்று தனது தாய் பெயரிட்டதாகக் கூறும் ஐஸ்வர்யா, தனது தாய்க்குத் தான் ஒரு மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததாகக் கூறியுள்ளார். இதற்காகக் கடந்த 2014ம் ஆண்டு மாடலிங் துறையில் இறங்கிய ஐஸ்வர்யா, தனது கடுமையான உழைப்பால் 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் இறுதி வரை முன்னேறியுள்ளார். ஆனால் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு எனக்குள் எப்போதுமே இருந்து கொண்டு இருந்தது. இதையடுத்து இரண்டு வருடங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துக் கொண்டு முழுமையாக சிவில் சர்விஸ் தேர்வுக்குப் படிக்கத் தயாரான ஐஸ்வர்யா, தற்போது அகில இந்திய அளவில் 93வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என கூறும் ஐஸ்வர்யா, சிவில் சர்வீசஸ் தேர்வைப் பொறுத்தவரைச் சரியான திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் பொறுமையும் முக்கியம் எனக் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை  என்சிசி'யில் கமாண்டிங் அதிகாரியாகத் தெலுங்கானா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். மாடலிங் துறையிலிருந்து கொண்டு திடீரென படிக்க அமர்ந்தது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை என கூறியுள்ள ஐஸ்வர்யா, சமூகவலைத்தளங்கள் மற்றும் மொபைல் போனை உபயோகிப்பதைத் தவிர்த்ததன் மூலம் தன்னால் முறையாகப் படிக்க முயன்றதாகக் கூறியுள்ளார். இதற்கு அசாத்தியமான மன திடம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், எந்த துறையிலிருந்தாலும் நமது மனதிற்குப் பிடித்த விஷயத்தைச் செய்யப் பெண்கள் எப்போதும் தவறக் கூடாது எனக் கூறியுள்ளார்.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், அதுவும் எந்த துறையிலிருந்து கொண்டும் தனக்குப் பிடித்த விஷயங்களை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஐஸ்வர்யா ஷெரன் நிச்சயம் ஒரு பெரிய ரோல் மாடல் தான்.

மற்ற செய்திகள்