‘ஷப்பா... இதுங்க தொல்லை தாங்க முடியலப்பா!’... விமான ஊழியர்கள் எடுத்த ‘வேற லெவல்’ முடிவு.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தின் அகமதாபாத் விமான நிலைய ஊழியர்கள் குரங்குகள் தொல்லையை சமாளிப்பதற்காக எடுத்துள்ள முடிவு வைரலாகி உள்ளது.
குஜராத்தை சுற்றியுள்ள விமான நிலையங்களில் காட்டு விலங்குகளின் அபாயம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அகமதாபாத் விமான நிலையத்தில் லங்குர் இன குரங்குகளால் பெருத்த இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் விமானம் தரையிறங்கும்போதும், மேலேறும்போதும் விமானங்களில் விலங்குகள் அடிபடவோ, விலங்குகளால் விமானங்களுக்கு அபாயம் நிகழவோ வாய்ப்பிருப்பதால், இந்த குரங்குகளை விரட்ட விமான நிலைய ஊழியர்கள் கரடி போன்று மாறுவேட உடை அணிந்து விமான நிலைய ஓடுதளங்களை சுற்றி வருகின்றனர்.
மேலும் இதைக் கண்டு குரங்குகள் பயந்து ஓடத் தொடங்கியதும்,
#WATCH Gujarat: An airport official at Sardar Vallabhai Patel International Airport in Ahmedabad dressed in 'bear' costume to scare away langoors on the premises. (Source-Airport Authority of India) pic.twitter.com/Qa6iIPFoLq
— ANI (@ANI) February 7, 2020
இந்த கெட்-அப் வெற்றிகரமானதாக மாறியுள்ளதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.