"அந்த ஷூவை கொடுங்க".. கறார் காட்டிய ஏர்போர்ட் அதிகாரிகள்.. பட்டுச் சேலையை பிரிச்சதும் பம்மிய பயணி.. பகீர் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கடத்திச் செல்ல முயன்ற நபர்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

"அந்த ஷூவை கொடுங்க".. கறார் காட்டிய ஏர்போர்ட் அதிகாரிகள்.. பட்டுச் சேலையை பிரிச்சதும் பம்மிய பயணி.. பகீர் வீடியோ..!

Also Read | தெலுங்கானாவில் திம்சா நடனமாடிய ராகுல் காந்தி.. அசந்துபோன பொதுமக்கள்.. வீடியோ..!

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை கடத்திவரும் நபர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் கடத்தல் நபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி கைதானவர்கள் கடத்தலுக்கு உபயோகிக்கும் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும்.

Airport Customs seize ₹4 crore in foreign currency 3 arrested

அந்த வகையில் இன்று மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு தப்பிச் செல்ல நினைத்திருக்கிறது 3 பேர்கொண்ட கடத்தல் கும்பல். நேற்று அதிகாலை 2 மணிக்கு ஃபிளை துபாய் விமானம் மூலமாக துபாய் செல்ல நினைத்திருக்கின்றனர் இவர்கள். அப்போது, சுங்கத்துறை அதிகாரிகள் இவர்களுடைய உடமைகளை பரிசோதனை செய்திருக்கின்றனர். உள்ளே வெறும் ஷூ மற்றும் பட்டுச் சேலை ஆகிய பொருட்கள் இருந்திருக்கின்றன.

அவற்றை பரிசோதிக்கும்போதுதான் உண்மை வெளியே வந்திருக்கிறது. அதாவது அந்த ஷூ மற்றும் சேலைக்குள் அமெரிக்க டாலர்களை கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருக்கின்றனர் இந்த பயணிகள். இதனையடுத்து 3 பேர்கொண்ட கும்பலை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து 3 பேருக்கும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

Airport Customs seize ₹4 crore in foreign currency 3 arrested

இதனிடையே கைதான 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேவேளையில் அவர்களிடம் இருந்து 4,97,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4.1 கோடி ரூபாய்) பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயணியின் உடமைகளில் இருந்து டாலர்களை அதிகாரிகள் வெளியே எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | சென்னையில் விசேஷ வீட்டில் செண்டை மேளம் அடித்து மகிழ்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. வைரலாகும் வீடியோ.!

MUMBAI, AIRPORT, SEIZE, FOREIGN CURRENCY, ARREST

மற்ற செய்திகள்