ஊரடங்கால் 'இந்தியாவில்' இப்படியொரு மாற்றமா?... 'நம்பமுடியாத' உண்மை... 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் கூட, இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால காற்று மாசுபாடு குறைவு, கங்கை-யமுனை நதிகளின் நீரின் தரம் உயர்ந்தது என பல்வேறு நன்மைகள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன.
இந்த நிலையில் ஊரடங்கால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்றின் மாசு இந்தியாவில் மிகவும் குறைந்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள், மார்ச் 31-ம் தேதிக்கும், ஏப்ரல் 5ம் தேதிக்கும் இடையில் படம்பிடித்துள்ள புகைப்படத்தில் வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின்( ஏரோசோல்) அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது என்று பதிவாகியுள்ளது.
Satellite data show that levels of airborne particles over northern #India have dropped significantly since the #COVIDー19 lockdown began. https://t.co/xz6NgbQLOW pic.twitter.com/aP0fi5vL64
— NASA Earth (@NASAEarth) April 21, 2020
இதுகுறித்து நாசாவின் மூத்த விஞ்ஞானி பவன் குப்தா, '' ஊரடங்கின் போது பல இடங்களில் வளிமண்டல அமைப்பில் மாற்றங்களைக் காண்போம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த ஆண்டு இந்தோ-கங்கை சமவெளியில் ஏரோசல் மதிப்புகள் மிகக் குறைவாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை, இது நம்பமுடியாத உண்மையாக உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.