'ஏற்கனவே கடன் சுமை'...'இப்போ 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு'... இப்படி ஒரு 'சோதனையா'?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடன் சுமையால் தவித்து வரும் ஏர் இந்தியா(Air India) நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சுமையாக, எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்கமாட்டோம் என அறிவித்துள்ளது.

'ஏற்கனவே கடன் சுமை'...'இப்போ 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு'... இப்படி ஒரு 'சோதனையா'?

அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு இந்தியன் ஆயில்(Indian Oil), பாரத் பெட்ரோலியம்(Bharat Petroleum), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்(Hindustan Petroleum) நிறுவனங்கள் எரிபொருட்களை வழங்கி வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் ரூபாய் 5 ஆயிரம் கோடி நிலுவை தொகையினை வழங்க வேண்டியுள்ளது.

இதனிடையே இந்த தொகையினை மொத்தமாக செலுத்த முடியாது என்பதால், மாதம் 100 கோடி வீதம் மாதம் தோறும் வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால் இதனை முறையாக பின்பற்ற ஏர் இந்தியா நிறுவனம் தவறியதால், வரும் வெள்ளிக்கிழமை முதல் முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையே இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயை ஏர் இந்தியா நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

AIRINDIA, BHARAT PETROLEUM, HINDUSTAN PETROLEUM, INDIAN OIL CORP, OIL COMPANIES