ஆஹா... ஒண்ணு கூடிட்டாங்கயா...! 'புறப்பட தயாரா இருந்தப்போ, சீட்டுக்கு அடியில...' - ஏர் இந்தியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎறும்பு படையினால் லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தை ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் பல ஆண்டுகளாக கடன் சிக்கலால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மத்திய அரசும் ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்கப் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
ஏர் இந்தியா முறையாக விமானங்களைப் பராமரிக்காமல் இருப்பதாகவும், மோசமான சேவையை வழங்குவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று லண்டன் செல்லவிருந்த நிலையில் அந்த விமானத்தில் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏஐ-111 என்ற விமானம் புறப்படத் தயாரான நிலையில், விமானத்தின் பிஸ்னஸ் க்ளாஸ் இருக்கைகள் இருந்த இடத்தில் எறும்புகள் கூட்டம் இருப்பதை பயணிகள் கவனித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், அந்த விமானத்தில் பூடான் நாட்டு இளவரசர் ஜிக்மே நம்ஜியேல் வாங்சக்கும் லண்டன் செல்வதற்காக இருந்துள்ளார். இந்நிலையில், விமானம் புறப்படுவது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
மற்ற செய்திகள்