ரொம்ப லேட் பண்ணாம... ஓவர் மேக்கப், அதிக ஜூவல்ஸ் அணியக்கூடாது.. ஏர் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பயணிகள் விமானங்களில் விரைவாக ஏறுவதற்கும், இருக்கையில் அமருவதற்கும் பணிப்பெண்கள் உதவும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப லேட் பண்ணாம... ஓவர் மேக்கப், அதிக ஜூவல்ஸ் அணியக்கூடாது.. ஏர் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.   1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன.

ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முயற்சி மேற்கொண்டது.  இந்த நிறுவனத்தை டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் வாங்க உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம், 68 ஆண்டுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்தின் கைகளில் சேர்ந்துள்ளது.   இதையடுத்து அந்த நிறுவனம் விமான சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Air India announces new restrictions on flight attendants

விமான பணிப்பெண்களுக்கு கட்டுப்பாடு

அதன் ஒரு பகுதியாக, விமானங்களை தாமதம் இன்றி இயக்குவதற்காக பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டாடா நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி பயணிகள் விமானங்களில் ஏறும்போது பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் சாப்பிடுவதோ அல்லது பானங்கள் அருந்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளில் தாமதம் ஏற்படுவதை தடுக்க நிறைய மேக்கப் போடக்கூடாது என்றும் அதிக நகைகள் அணிய வேண்டாம் என்றும் குறைந்தபட்ச நகைகளை அணியவேண்டும் என்றும் பணிப்பெண்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Air India announces new restrictions on flight attendants

பயணிகளை கவனிப்பது எப்படி?

பயணிகள் விமானங்களில் விரைவாக ஏறுவதற்கும், இருக்கையில் அமருவதற்கும் பணிப்பெண்கள் உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கட்டுப்பாட்டு அறை பரிசோதனை கவுண்டர்களில் பயணிகளை நீண்ட நேரம் காத்திருக்க அனுமதிக்கக்கூடாது.  மேலும், சோதனைகளை விரைவாக முடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதியை வழங்கவேண்டும். எந்த காரணத்துக்காகவும் பயணிகள் விமானத்தில் ஏறுவதை தாமதப்படுத்தக்கூடாது.

Air India announces new restrictions on flight attendants

சரியான நேரத்தில் ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் விமானத்துக்கு செல்ல வேண்டும். எந்தவொரு நடவடிக்கையின் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

AIR INDIA, AIR HOSTES, TATA GROUP, TATA SONS, FLIGHT, MAKUP, GOLD, AVOID JEWELS

மற்ற செய்திகள்