'மூணாவது அலை வர்றதுக்கு ரொம்ப நாள்லாம் ஆகாது...' இப்படியே போச்சுன்னா வெறும் 'இத்தனை' வாரம் தான்...! - டெல்டா வைரஸ் குறித்து 'ஷாக்' தகவலை வெளியிட்ட எய்ம்ஸ் இயக்குனர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கொரோனாவின் மூன்றாம் அலையின் தீவிரம் குறித்தும், மக்களின் நடவடிக்கை குறித்தும் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

'மூணாவது அலை வர்றதுக்கு ரொம்ப நாள்லாம் ஆகாது...' இப்படியே போச்சுன்னா வெறும் 'இத்தனை' வாரம் தான்...! - டெல்டா வைரஸ் குறித்து 'ஷாக்' தகவலை வெளியிட்ட எய்ம்ஸ் இயக்குனர்...!

அதில், 'கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் பல மாநிலங்கள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளில் எந்தவிதப் பாடமும் மக்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் அணிவதில்லை. இது கொரோனாவின் மூன்றாவது அலைக்கு கண்டிப்பாக வழிவகுக்கும். அதோடு, இதேபோல் இருந்தால் கொரோனா மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8-வது வாரங்களில் தாக்கக் கூடும்.

இரண்டாவது அலையில் பாதிக்கபடாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நாம் எவ்வாறு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்தே மூன்றாவது அலையின் தாக்கத்தின் பாதிப்புகள் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வரும் போது தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். 5 சதவீதத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்கள் குறைந்தபட்ச ஊரடங்கை செயல்படுத்த வேண்டும்.

முக்கியமாக நாம் கருத்தில் கொள்ளவேண்டியது கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. முதல் அலை கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் அலையில் போது உருமாறிய வைரஸ், மிக வேகமாக தீவிர தொற்றுநோயாக பரவி பல உயிரிழப்புகளை தந்தது. இப்போது அதைவிட மாறுபாடு அடைந்து பரவி வரும் டெல்டா வகைத் தொற்று மிக வேகமாக பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஒரு அலை முடிந்த பின் மற்றொரு புதிய அலை வர மூன்று மாதங்கள் வரை ஆகலாம், ஆனால் இது பல்வேறு காரணிகளைப் பொறுத்து மிகக் குறைந்த காலத்தையும் எடுத்துக்கொள்ளக் கூடும். தடுப்பூசி போடாவிட்டால் அடுத்த சில மாதங்களில் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்' எனக் கூறியுள்ளார் குலேரியா.

மற்ற செய்திகள்