Michael Coffee house

ப்ளீஸ்...! 'அந்த ஆள எப்படியாச்சும் பிடிச்சிடுங்க...' 'நம்பி தானே காசு அனுப்பினேன்...' 'அதுக்கு இப்படியா பித்தலாட்டம் பண்ணுவாங்க...' - ஆஃபர்ல ஐபோன்-11 வாங்க ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேஸ்புக் விளம்பரம் மூலமாக அகமதாபாத்தைச் சேர்ந்த சிவில் இஞ்சினியர் ஒருவரை ஹைடெக் திருடர்கள் நம்ப வைத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

ப்ளீஸ்...! 'அந்த ஆள எப்படியாச்சும் பிடிச்சிடுங்க...' 'நம்பி தானே காசு அனுப்பினேன்...' 'அதுக்கு இப்படியா பித்தலாட்டம் பண்ணுவாங்க...' - ஆஃபர்ல ஐபோன்-11 வாங்க ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதி...!

அவரிடம் மிகக் குறைவான விலையில் ஐபோன்-11 தருவதாக கூறி இந்த ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளனர். ஏமாந்த கந்தர்ப் பட்டேல் (27) போலீசில் புகார் அளித்துள்ளார்.

“சென்ற ஜனவரி மாதம் எனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கிடைக்கும் என தில் கூறப்பட்டிருந்தது. அதில் இருந்த காண்டேக்ட் நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் தன்னை ‘ராணுவ அதிகாரி’ என கூறினார்.

Ahmedabad civil engineer high-tech thieves cheat iphone 11

முதற்கட்டமாக ரூ.4,000 தபால் செலவுக்காக கேட்டார், அனுப்பி வைத்தேன். தொடர்ந்து போனின் மொத்த தொகையில் பாதியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என சொல்லியதாகவும். அப்படி செய்தால் ரூ.24,000 போக மற்ற தொகையை எனது வங்கி எண்ணிற்கு திருப்பி அனுப்பப்படும் என கூறினார்கள்.

அதை நானும் உண்மை என நம்பி பணத்தை செலுத்தினேன். இவ்வாறாக ஒரு ரூ.60,000 வரை பணம் கொடுத்தேன். ஆனால் போன் எனக்கு கடைசி வரைக்கும் வந்த பாடில்லை. அப்புறம் தான் நான் ஏமாந்து போயுள்ளேன் என உணர்ந்தேன். தயவு செய்து  குற்றவாளியை சீக்கிரமாக கண்டுபிடியுங்கள்” என புகாரில் கந்தர்ப் பட்டேல் வேதனையுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்