'வெயில் கொடுமை தாங்கல!' 'அதுக்காக காருக்கு இதெல்லாமா பூசுவாங்க'... வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெயில் கொடுமையில் இருந்து தப்புவதற்காக, காருக்கு சொந்தக்காரர் ஒருவர், தனது காரை மாட்டுச் சாணத்தால் மெழுகிய விநோத சம்பவம் நடந்துள்ளது .

'வெயில் கொடுமை தாங்கல!' 'அதுக்காக காருக்கு இதெல்லாமா பூசுவாங்க'... வைரலாகும் புகைப்படம்!

அக்னி வெயில் முடிவடைய இன்னும் ஒருவார காலமே உள்ளநிலையில், கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ளது. பருவ மழை பொய்த்துப் போனதால் மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலில் இருந்து தப்ப பொதுமக்கள் பல்வேறு விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர்.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர், வெயிலில் இருந்து தப்புவதற்காகத் தனது காரை சாணத்தால் மெழுகிய விநோத சம்பவம் நடந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் இதுகுறித்து ரூபேஷ் கௌரங்க தாஸ் என்பவர் புகைப்படங்களைப் பகிரவே, அது வைரல் ஹிட்டடித்துள்ளது.

அந்தப் புகைப்படங்கள் அகமதாபாத்தில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ரூபேஷ், 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், தனது கார் வெப்பமடையாமல் காத்துக்கொள்வதற்காக சீஜல் ஷா எனும் பெண்மணி, தனது காரை சாணத்தால் மெழுகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

CAR, VIRALPHOTOS, AHMEDABAD