'எக்ஸாம் ஹால்ல முனகல் சத்தம்...' யார்டா அது...? ஏன் உங்க கை அடிக்கடி நெஞ்சு பக்கம் போகுது...? - 10 மாணவர்களும் ஒரே மாதிரி தில்லுமுல்லு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மருத்துவப்படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் எந்திரன் படத்தில் வரும் காட்சியை போல் காப்பி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எக்ஸாம் ஹால்ல முனகல் சத்தம்...' யார்டா அது...? ஏன் உங்க கை அடிக்கடி நெஞ்சு பக்கம் போகுது...? - 10 மாணவர்களும் ஒரே மாதிரி தில்லுமுல்லு...!

ஆக்ரா பல்கலைக் கழகத்தின் காந்தாரி வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வு நடைபெறும் சமயத்தில் தேர்வறையில் சில முனகல் சத்தம் கேட்கவே தேர்வறை கண்காணிப்பாளர் மிக தீவிரமாக மாணவர்களை கண்காணித்துள்ளார்.

அப்போது, சில தேர்வர்கள் மட்டும் அடிக்கடி தன் நெஞ்சுப் பகுதியில் கைவைத்து அழுத்திக் கொண்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளார். அதையடுத்து அம்மாணவர்களிடம் ஏன் அடிக்கடி நெஞ்சில் கை வைக்கிறீர்கள், அங்கு என்ன உள்ளது என கேள்வி கேட்டு அதை காண்பிக்குமாறும் கூறியுள்ளார்  ஆனால் அம்மாணவர்கள் அனைவரும் சொல்லிவைத்தாற்போல் அது தங்களது மதச் சின்னம் என்றும், அதை யாருக்கும் காட்டக் கூடாது எனக் கூறியுள்ளனர்.

அதையடுத்து குறிப்பிட்ட அந்த 10 மாணவர்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர்கள் அனைவரும் தங்களிடம் சிம்கார்டுடன், ப்ளூடூத் இணைக்கப்பட்ட இயர்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் எந்திரன் படத்தில் ரோபோ சொல்லிக்கொடுப்பதுப் போல வெளியில் இருந்து யாரோ அவர்களுக்கு வினாக்களுக்கான விடைகளை சொல்லியதும் தெரிய வந்தது.

இந்தக் குற்றச்செயல் குறித்து பல்கலைக்கழகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கூறிய பல்கலைக்கழக ஆணையம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆக்ரா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் அஷோக் மிட்டல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்