'என்னோட பொண்ணு எங்க'?... 'சொன்னாதான் ட்ரீட்மென்ட் எடுப்பேன்'... கலங்கி நின்ற மருத்துவர்கள் !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று நடந்த பேருந்து விபத்தில் கணவர் மற்றும் தனது மகளை இழந்த பெண்ணின் குமுறல் மருத்துவர்களை கலங்க செய்துள்ளது.

'என்னோட பொண்ணு எங்க'?... 'சொன்னாதான் ட்ரீட்மென்ட் எடுப்பேன்'... கலங்கி நின்ற மருத்துவர்கள் !

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடைபெற்ற கோர விபத்து அந்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்ற பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள்.

இதனிடையே இந்த விபத்தில் தன்னுடைய கணவர் மற்றும் மகளை இழந்த பெண்ணின் கதறல் மருத்துவமனையில் உள்ளவர்கள் பலரையும் கலங்க வைத்துள்ளது. நேற்று நடந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் சுனிதா என்ற பெண் தனது கணவர், மகள் மற்றும் மகளோடு பயணம் செய்துள்ளார். இதில் சுனிதாவும் அவரது மகனும் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்கள்.''கணவருக்கு டெல்லியில் நல்ல வேலை கிடைத்ததால் டெல்லி செல்லும் போது இந்த துயரம் நடந்து விட்டதே என கூறி அழுதுள்ளார்.

இதனிடையே கணவரையும், தனது மகளையும் காண்பித்தால் மட்டுமே தான் சிகிச்சை எடுத்து கொள்வேன் என சுனிதா கூற மருத்துவமனை செவிலியர்கள் அவரை தேற்றி சிகிச்சை எடுக்க வைத்துள்ளார்கள். அவர் தற்போது தனது கணவன் மற்றும் மகளின் மரணத்தை ஏற்று கொள்ளும் நிலையில் இல்லாததால், அவர் சற்று மனநிலை தேறியவுடன் கணவன் மற்றும் மகளின் மரணம் குறித்து தெரியப்படுத்தப்படும் என மருத்துவர்கள் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.

ACCIDENT, UTTARPRADESH, AGRA BUS ACCIDENT, YAMUNA EXPRESSWAY