ஒரே நாளில் திடீரென ட்ரெண்ட் ஆன பன்னீர் பட்டர் மசாலா.. ட்விட்டர் முழுக்க இதான் பேச்சு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இணையத்தில் அவ்வப்போது ஒரு டிஷ் ட்ரெண்ட் ஆகிவிடுவது உண்டு. அப்படித்தான் இப்போது பன்னீர் பட்டர் மசாலா ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ஒரே நாளில் திடீரென ட்ரெண்ட் ஆன பன்னீர் பட்டர் மசாலா.. ட்விட்டர் முழுக்க இதான் பேச்சு..!

சில வருடங்களில் நேசமணி எனும் வடிவேலுவின் பழைய கதாபாத்திரம் ட்ரெண்ட் ஆனது. இப்போது அந்த வரிசையில் பன்னீர் பட்டர் மசாலா திடீர் ட்ரெண்ட் அடித்துள்ளது. காரணம் அண்மைக் காலங்களாக பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தயிர், பால், பன்னீர், லஸ்ஸி, சீஸ், கோதுமை மாவு, அரிசி, வெள்ளம், தென், அப்பளம், மீன், இறைச்சி போன்ற பல உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி ரிவைஸ் செய்யப்பட்டுள்ளது.

பன்னீருக்கு  5 % ஜிஎஸ்டியும், வெண்ணெய்க்கு 12%  ஜிஎஸ்டியும், மசாலா பொருட்களுக்கு 5 % ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படியானால் மொத்தமாக பன்னீர் பட்டர் மசாலாவிற்கு 22 % ஜிஎஸ்டியா..? என விளையாட்டாக குறிப்பிடும் இணையவாசிகள் பலரும் இப்போது மொத்தமாக பன்னீர் பட்டர் மசாலாவுக்கு எத்தனை சதவீதம் ஜிஎஸ்டி வரும் என்பதை நோக்கிய கணக்கில் இறங்கியுள்ளனர். பலரும் இது தொடர்பான தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

After Revised GST Paneer Butter Masala Trending

இன்னும் சிலர், அப்படியானால் பன்னீர் பட்டர் மசாலா தோசைக்கு என்ன தான் ஜிஎஸ்டி வரும்? என கணக்கு போட்டு பார்க்க சொல்லி இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ஆன்லைன் சந்தையில் திடீரென பன்னீர் பட்டர் மசாலா என்கிற டிஷ் மட்டும் படு ட்ரெண்ட் ஆகியுள்ளது.

PANEER BUTTER MASALA, GST PANEER BUTTER MASALA, REVISED GST

மற்ற செய்திகள்