'ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலை சதம் அடித்த மாநிலம்'... அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலை சதம் அடித்த மாநிலம்'... அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து, ரூ.100.13-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ரூ.2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசலை பொறுத்தவரை ஒரு லிட்டர் ரூ.93.16க்கு விற்பனை செய்யப்பட்டது. கங்கா நகரில் ஒரு லிட்டர் உயர் ரக பெட்ரோல் ரூ.102.91-க்கும், டீசல் ரூ.95.79-க்கும் விற்பனையானது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.  பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90-ம், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80-ம் விதிக்கிறது. இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. 

After Rajasthan, petrol hits Rs 100/litre mark in MP

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.19.95-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.66-ம் அதிகரித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தானைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்