Annaathae others us
Jai been others

'புனித் ராஜ்குமார் மரணத்தை தொடர்ந்து...' 'மருத்துவமனைக்கு படையெடுக்கும் இளைஞர்கள்...' - என்ன காரணம்...? - வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார்.  அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.

'புனித் ராஜ்குமார் மரணத்தை தொடர்ந்து...' 'மருத்துவமனைக்கு படையெடுக்கும் இளைஞர்கள்...' - என்ன காரணம்...? - வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...!

அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் எவ்வளவோ முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். புனித் ராஜ் குமாரின் மரணம் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

after puneeth rajkumar death youths undergoing cardiac tests

உடல்நலத்தில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்பவர் நடிகர் புனித் ராஜ்குமார். டான்ஸ், வொர்க் அவுட் என எப்போது உடலை ஃபிட்டாக வைத்துகொள்ளும் புனித் மாரடைப்பால் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அகால மரணத்திற்கு பிறகு கர்நாடகாவில் இதய பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

after puneeth rajkumar death youths undergoing cardiac tests

மைசூருவில்  அரசாங்கத்தால் நடத்தப்படும் ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வழக்கமாக நாளொன்றுக்கு 1,200 பேர் இதய பரிசோதனை செய்துகொள்வார்கள். ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று 1,600 பேர் இதய பரிசோதனை செய்துள்ளனர். இதய பரிசோதனை செய்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.

after puneeth rajkumar death youths undergoing cardiac tests

புனித் ராஜ்குமாரின் மரணத்தின் தாக்கமாகவே இப்படி திடீரென பலர் இதய பரிசோதனை செய்துகொளவது அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எப்படியிருந்தாலும், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மருத்துவர்களின் அறிவுரைகளின் படி இதய பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

after puneeth rajkumar death youths undergoing cardiac tests

இதேபோல், கடுமையான உடற்பயிற்சி செய்தபோதுதான் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதால் உடற்பயிற்சி குறித்த தவறான தகவல்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் ஜிம்மிற்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

CARDIAC TEST, PUNEETH RAJKUMAR, YOUTHS

மற்ற செய்திகள்