ஜோஷிமத் மாதிரியே பூமிக்குள் புதையும் அடுத்த நகரம்.. பீதியில் பொதுமக்கள்.. உச்சகட்ட பரபரப்பில் அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து உடனடி நடவடிக்கைகளில் மாநில மற்றும் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் ஜோஷிமத் அருகில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் வீடுகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஜோஷிமத் மாதிரியே பூமிக்குள் புதையும் அடுத்த நகரம்.. பீதியில் பொதுமக்கள்.. உச்சகட்ட பரபரப்பில் அதிகாரிகள்..!

Also Read | யம்மாடி என்ன ஸ்பீடு.. உம்ரான் மாலிக்கின் தீயான பவுலிங்.. மொத்த ரெக்கார்டும் காலி..!

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற பகுதி. இந்த நகரம், இந்தியா மற்றும் சீனா நாடுகள் எல்லையின் கேட் வேயாக உள்ளது. அதே போல, இந்த நகரின் வழியாக தான் புனித தலமான பத்ரிநாத் கோவிலுக்கும் செல்ல முடியுமாம். இது தவிர அவுலி மலைத் தொடருக்கும் இந்த நகரம் வழியாக தான் செல்ல முடியும் என தகவல்கள் கூறுகின்றது.

இதனால், மிக முக்கியமான நகரமாக பார்க்கப்படும் இந்த ஜோஷிமத் பகுதியில் தான் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் விரிசல் விழுவதாகவும் சில இடங்கள் மண்ணில் புதைந்து போவதாகவும் தகவல்கள் வெளியானது. சமீப காலமாக இந்த சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் திடீரென எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இப்படி வீடுகளில் விரிசல் விழுவதும் இடங்கள் மண்ணில் புதைவதும் அப்பகுதி மக்களை குழப்பத்திலும் அதே வேளையில் பயத்திலும் ஆழ்த்தி இருந்தது.

After Joshimath houses cracks in Uttarakhant karnprayag

இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய ஆய்வில் ஜோஷிமத் பகுதியில் அதிக நிலச்சரிவு இருப்பதாகவும் சிறிய மழை பெய்தால் கூட நிலச்சரிவு ஏற்படும் என அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும், இந்த மொத்த நகரத்தின் அடித்தளம் என்பது நிலைத்தன்மை உடையதாக இல்லை என்றும் இதன் காரணமாக தான் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் விரிசல் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

After Joshimath houses cracks in Uttarakhant karnprayag

இந்நிலையில், உத்தராகண்டின் கர்ணபிரயாக் அருகில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக, உள்ளூர் நகராட்சி மாநில அரசிடம் உதவி கோரியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசு உதவி செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

After Joshimath houses cracks in Uttarakhant karnprayag

ஏற்கனவே, ஜோஷிமத் பகுதியில் வீடுகள் விரிசல் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், அருகில் உள்ள கர்ணபிரயாக் அருகில் உள்ள பகுகுணா நகரிலும் வீடுகள் விரிசலடைந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இப்படி ஒரு சோகமான சாதனையா.?.. முழு விபரம்..!

UTTARAKHAND, JOSHIMATH HOUSES CRACKS, KARNPRAYAG, UTTARAKHAND CRISIS

மற்ற செய்திகள்