Miss Universe 2021: இந்தியா.. என்று சொல்லும் போதே அதிர்ந்த அரங்கம்.. மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் யார்?
முகப்பு > செய்திகள் > இந்தியாமிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டி இஸ்ரேல் நாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பெண் ஒருவர் பட்டத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்தைக் கைப்பற்றி இருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்து. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் நடிப்பு, மாடலிங் என பிஸியாக இருக்கும் ஒரு நட்சத்திரம். மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் 70 ஆண்டு போட்டிதான் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் தான் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் ஹர்னாஸ்.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பெண் ஒருவர் இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1994-ம் ஆண்டு முதல் இந்தியப் பெண் ஆக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைக் கைப்பற்றியவர் நடிகை சுஷ்மிதா சென். அதன் பின்னர் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைக் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் 2-ம் இடத்தை பராகுவே நாட்டைச் சேர்ந்த நாடியா ஃபெரெய்ரா பெற்றார். 3-ம் இடத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லாலேலா ஸ்வானே பெற்றார். இறுதிப் போட்டியில் கேள்வி- பதில் சுற்றில், “இன்றைய இளம் பெண்கள் சந்திக்கும் அழுத்தங்களை சமாளிக்க நீங்கள் என்ன ஆலோசனை கூறுவீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஹர்னாஸ் கவுர், “நம்மை நாமே நம்ப வேண்டும் என்பது இன்றைய இளம் தலைமுறையினருக்குப் பெரும் அழுத்தமாக இருக்கிறது. அதை சமாளிக்க முதலில் நம்மை நாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். சர்வதேச அளவில் நம்மைச் சுற்றி பல முக்கிய விஷயங்கள் நடக்கின்றன. அதுகுறித்துப் பேசலாம். நமக்காக நாம் தான் பேச வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கு நாம் மட்டுமே தலைவர் ஆக வழிநடத்த வேண்டும். என்னை நான் நம்பினேன். அதன் காரணமாகவே இன்று இந்த மேடையில் நிற்கிறேன்” என்றார்.
மற்ற செய்திகள்