பனி லிங்க தரிசனம்.. பரவசமடைந்த பக்தர்கள்.. 2 வருடம் கழித்து கோலாகலமாக துவங்கிய அமர்நாத் யாத்திரை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக புகழ்பெற்ற அமர்நாத் புனித யாத்திரை இரண்டு வருடங்களுக்கு இன்று துவங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இங்கே உறைந்த நிலையில் இருக்கும் லிங்கத்தை வழிபட ஏராளமான மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைக்கு செல்ல மக்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
2 வருடம் கழித்து
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் அமர்நாத் யாத்திரைக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வருடம் யாத்திரைக்கு மக்களை அனுமதிப்பது குறித்து சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமர்நாத் கோவில் நிர்வாக கூட்டம் சமீபத்தில் நடந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் ஆளுநருமான மனோஜ் சின்ஹா தலைமையில் பக்தர்களுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 30 ஆம் தேதி (இன்று) முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள்
இந்நிலையில், முன்னதாக அமர்நாத் யாத்திரை செல்லும் முதல் குழுவின் பயணத்தை ஆளுநர் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று முதல் 43 நாட்களுக்கு அமர்நாத் புனித யாத்திரை நடைபெற இருக்கிறது. இந்த புனித பயணத்தில் கலந்துகொள்ள இருக்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, காஷ்மிரீன் தென்பகுதிகளான குல்காம், சோபியான், புல்வாமா பகுதிகளில் ஆயிரக்கண பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பக்தர்களின் வாகனங்களை கவனிக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
2 வருடங்கள் கழித்து அமர்நாத் புனித யாத்திரை துவங்கியுள்ளதால் பக்தர்கள் ஆர்வத்துடன் பனி லிங்கத்தை தரிசித்து வருகிறார்கள்.
Also Read | பந்துகள் போல மாறும் வானம்..எப்படி உருவாகின்றன இந்த மேகங்கள்? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?
மற்ற செய்திகள்