உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சிவன் கோவில்.. 360 டிகிரியில் எடுக்கப்பட்ட பரவசமூட்டும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவில் என கருதப்படும் துங்கநாத் மகாதேவ் கோவிலின் சமீபத்திய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துங்கநாத் மகாதேவ் கோவில்
உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் 3680 மீட்டர் உயரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது உலகத்தின் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவில் என நம்பப்படுகிறது. பஞ்ச கேதார் தலங்களில் இந்த கோவிலும் ஒன்றாக கருதப்படுகிறது. துங்கநாத் என்பதற்கு மலைகளின் கடவுள் எனப் பொருளாகும். இந்த கோவில் இந்து மத இதிகாசமான மஹாபாரதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மலைப் பகுதியில் இருந்துதான் அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆகிய புகழ்மிக்க ஆறுகள் தோன்றுகின்றன.
நார்வே அதிகாரி
இந்நிலையில், முன்னாள் நார்வே நாட்டு ராஜாங்க அதிகாரியாக இருந்த Erik Solheim என்பவர் இந்த கோவிலின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் வானத்தில் இருந்து கோவிலின் அழகிய சுற்றுப் புறங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றிலும் பனி படர்ந்த இடத்தில் அமைந்துள்ள துங்கநாத் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அங்கு வந்திருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்துள்ள Erik Solheim அதில்,"இன்கிரிடிபிள் இந்தியா. உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள மகாதேவ் கோவில். 5000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது! உத்தரகாண்ட்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விவாதம்
இந்த வீடியோவை இதுவரையில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். இந்த வீடியோவை 5000 க்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகிவிட்டது. இருப்பினும் சிலர் இதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை மறுத்திருக்கின்றனர். ஒருவர் இந்த பதிவில், "இந்தக் கோவில் கட்டிடக்கலை சிறப்பாக உள்ளது. இது ஆச்சரியமாக இருக்கிறது. அது பனிச் சரிவுகள் மற்றும் பூகம்பங்களில் கூட தப்பித்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சிலர் இந்த கோவில் 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்பில்லை எனவும் 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியார் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் கமெண்ட் செய்திருக்கின்றனர்.
Incredible India 🇮🇳!
World's Highest Located Mahadev Mandir.., believed to be 5000 years old !
Uttarakhand
— Erik Solheim (@ErikSolheim) October 2, 2022
மற்ற செய்திகள்