'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிகழும் டிஜிட்டல் தளங்களில் மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டதுடன், பாடங்கள் தடைபடக் கூடாது என்பதற்காக , மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள் பாடம் நடத்தக் கூடிய வீடியோ கான்பரன்சிங் செயலிகளான ஜூம் மற்றும் வாட்ஸ்-ஆப் டிஜிட்டல் தளங்களுக்குள் ஊடுருவி ஆபாச வீடியோக்களை மர்ம நபர்கள் பதிவேற்றிய சம்பவம் கேரளாவில் 3 இடங்களில் நடந்துள்ளன.
பரப்பனாங்காடி பள்ளியில் நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளின்போது வாட்ஸ்-ஆப் குழுவுக்குள் ஊடுருவிய மர்ம நபர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆபாச வீடியோக்களை பதிவிடத் தொடங்கினர். இதனிடையே மாணவர் ஒருவர் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்திருந்ததால், குழுவுக்குள் வீடியோக்கள் பகிரப்பட்ட சம்பவம் வீடியோவாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஆசிரியர்கள், குழந்தைகள் நல ஆணையத்தைத் தொடர்புகொண்டு புகார் அளித்ததை அடுத்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, இதுபோன்ற டிஜிட்டல் செயலிகள் ஒவ்வொன்றையும் கண்காணிப்பது சாத்தியம் இல்லாதது என்பதால், ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும்தான் தன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்