'இப்படியா பண்ணுவீங்க?'.. தலைமைச் செயலக வாட்ஸ்-ஆப் குழுவில்.. ஷேர் ஆன 60 'பதின்ம' வீடியோக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள அரசின் தலைமைச்செயலக அதிகாரிகள், ஒருங்கிணைந்த வாட்ஸ்-ஆப் குழு ஒன்றில் இருக்கின்றனர். இந்த குழுவுக்குள், யாரோ ஒருவரின் நம்பரில் இருந்து 60க்கும் மேற்பட்ட பதின்பருவ வீடியோக்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக, பகிரப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

'இப்படியா பண்ணுவீங்க?'.. தலைமைச் செயலக வாட்ஸ்-ஆப் குழுவில்.. ஷேர் ஆன 60 'பதின்ம' வீடியோக்கள்!

கேரளாவின் தலைமைச்செயலக அதிகாரிகள் பலரும் கம்யூனிகேஷன் சவுகரியத்துக்காக ஒரு வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்துள்ளனர். 'நம்மள் சகாக்கள்' என்கிற பெயருடைய இந்த வாட்ஸ்-ஆப் குழுவில் ஆண், பெண் உட்பட வெவ்வேறு அதிகார அடுக்குகள் கொண்ட  பல்வேறு அதிகாரிகளும், ஊழியர்களும் உள்ளனர். இவர்கள் இந்த குழுவில் உடனடி தகவல்கள், அலுவலக அப்டேட்ஸ், தனித்தனியே சொல்ல முடியாத முக்கியமான மாற்றங்கள் பற்றிய தகவல்கள், தங்கள் தேவைகள், ஊழியர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து வந்தனர். அப்படித்தான் மிக அண்மையில் அசோசியேட் மீட்டிங் தொடர்பான விவாதம் இந்த வாட்ஸ்-ஆப் குழுவில் போய்க்கொண்டிருந்துள்ளது.

அப்போது ஒன்றல்ல, இரண்டல்ல, 60 பதின்பருவ வீடியோக்கள் மொத்தமாக வந்து சரமாரியாக விழுந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஒரு கணம் உறைந்தே போய்விட்டனர்.  இதனை குழுவில் இருந்த ஒரு பெண்,  அட்மினுக்கு போன் செய்து கூற, அப்போதுதான் அட்மினுக்கே இந்த விஷயம் தெரியவந்து, வீடியோக்களை அனுப்பிய நபரிடம் பேசிவிட்டு வருவதாகச் சொல்லியுள்ளார்.  அடுத்த சில விநாடிகளில், அந்த குழுவில் உள்ள அதிகாரி ஒருவரின் போன் தொலைந்துவிட்டதாகவும்; அந்த போனை திருடியவர்கள்தான் இவ்வாறு வீடியோக்களை பகிர்ந்துள்ளதாகவும், குழு அட்மின், குழுவில் ஒரு மேசேஜை போட்டார்.

இதனையடுத்துபலரும் சமாதானம் ஆயினர். ஆனால அடுத்த நாள், வீடியோக்கள் பகிரப்பட்ட போன் நம்பருக்குண்டான குறிப்பிட்ட அதிகாரியின் தொலைந்துபோனதாகக் கூறப்பட்ட போன், தொலையவில்லை என்பதையும், அது அவரிடமே இருந்ததையும் சிலர் கண்டுபிடித்தனர். அப்போதுதான் அட்மினும், அந்த அதிகாரியும் சேர்ந்து போன் தொலைந்ததாக பொய் கூறியது பலருக்கும் தெரியவந்தது.

இதனை அடுத்து இந்த 2 பேருக்கும், குழுவின் பெண் உறுப்பினர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அந்த குழுவில் இருந்து வெளியேறி மேலதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அந்த குழுவும் டி-ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது. தற்போது இதுபற்றி பிற அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், இந்த குழுவுக்கள் இருந்த வெகுசிலரால் இந்த களேபரம் வெளியில் கசிந்துள்ளதாகவும் கேரள ஊடகமான மாத்ருபூமி, தனது தளத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளது.