'பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு மட்டும் கேக்காதீங்க'... 'பாதுகாப்பு கேட்கிறதா'?... சீரம் நிறுவனம் கேட்டதன் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

'பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு மட்டும் கேக்காதீங்க'... 'பாதுகாப்பு கேட்கிறதா'?... சீரம் நிறுவனம் கேட்டதன் பின்னணி!

கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது ஒரே ஆயுதமாக இருப்பது தடுப்பூசி மட்டுமே. வெளிநாட்டுத் தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகியவை விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டுக் காப்பீடு வழங்கக்கூடும் என்று தெரிகிறது.

Adar Poonawalla seeks indemnity protection for Serum Institute

அதாவது, தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவும் சட்டரீதியான பாதுகாப்பைக் கோரியதாகச் செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

Adar Poonawalla seeks indemnity protection for Serum Institute

இழப்பீடு கோருவதிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டால், இந்திய நிறுவனமான சீரம் மட்டுமல்ல, அனைத்து தடுப்பூசி நிறுவனங்களும் அதே பாதுகாப்பைப் பெற வேண்டும் என்றும் சீரம் நிறுவனம் கூறியதை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசிக்கும் மத்திய அரசு இதுவரை சட்டரீதியான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்