'நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு'... 'காத்திருந்த ஆச்சரியம்'?..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை ரோஜாவிற்கு முக்கிய  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

'நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு'... 'காத்திருந்த ஆச்சரியம்'?..

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருடன் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் கடந்த சனிக்கிழமையன்று பதவியேற்றனர். நகரி தொகுதியின் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

இதனால் இவருக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஜாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்பதற்காக விஜயவாடாவுக்கு வந்த ரோஜா, 'அமைச்சர் பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை என்றார்.

ஜாதிகளின் அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றும், கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும்' கூறினார். இதனிடையே திடீர் திருப்பமாக ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்பை, ரோஜா ஏற்றுக்கொண்டவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.