"இப்படி ஒரு காரியத்தை செஞ்சது எந்த முட்டாள்-னு தெரியல" .. பிரபல நிறுவனத்தை வறுத்தெடுத்த சன்னி லியோன்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பொங்கி எழுந்த விஷயம் தான் இப்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

"இப்படி ஒரு காரியத்தை செஞ்சது எந்த முட்டாள்-னு தெரியல" .. பிரபல நிறுவனத்தை வறுத்தெடுத்த சன்னி லியோன்.. முழு விபரம்..!

#Breaking:அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு மரண தண்டனை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!

பாலிவுட் வட்டாரத்தின் சென்சேஷனாக அறியப்படும் சன்னி லியோனின் பான் கார்டு தகவல்களை சிலர் திருடி உள்ளனர். அதன் மூலம் இந்தியா புல்ஸ் நிறுவனத்திடம் இருந்து 2000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்கள் அந்த வித்தியாசமான திருடர்கள்.

இந்நிலையில், தன்னுடைய பெயரில் 2000 ரூபாய் கடன் இருப்பதை அறிந்த சன்னி லியோன் தனது டிவிட்டர் பக்கத்தில், "இது எனக்கு தற்போது நடந்துள்ளது. எந்த முட்டாளோ என்னுடைய பான் கார்டு தகவல்களை உபயோகித்து 2000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். என்னுடைய சிபில் ஸ்கோர் இதனால் பாதிக்கப்படும். ஐவிஎல் செக்யூரிடீஸ் நிறுவனம் இதுகுறித்து எந்த உதவியையும் செய்யவில்லை. இந்தியா புல்ஸ் நிறுவனம் இதை எப்படி அனுமதிக்கும்?" என காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

தானி நிறுவனத்தை நிர்வகிக்கும் இந்தியா புல்ஸ் நிறுவனம் மளிகை பொருட்கள், ஸ்டாக் புரோக்கரேஜ் எனப்படும் பங்கு தரகு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடன் வழங்கி வருகிறது. மேலும், 5 லட்ச ரூபாய் கடன் வரம்புடன் கடன் அட்டை வழங்கும் சேவைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதேபோல, தானி நிறுவனமும் ஈகாமர்ஸ் எனப்படும் இணைய வழி வர்த்தகம், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சன்னி லியோனின் டிவிட்டர் கேள்விக்கு பதில் அளித்த இந்தியா புல்ஸ் நிறுவனம், இந்த விஷயத்தில் தங்களது மேல் குற்றம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

சன்னி மட்டுமல்ல

Actor Sunny Leone claims identity theft – Here are the Details

இந்நிலையில், தானி நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிறரது பான் கார்டு விபரங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி தானி இணையதளம் மூலமாக கடன் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலரும் தானி நிறுவனம் எப்படி தங்களது பான் விபரங்களை வைத்து பிறர் கடன் வாங்குவதை அனுமதிக்கலாம்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actor Sunny Leone claims identity theft – Here are the Details

சன்னி லியோன் பெயரில் 2000 ரூபாய் கடன் வாங்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக ஆன நிலையில் அதே நிறுவனத்தின் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருவது அந்த நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் ஆஸத்தை கிரவுண்டில் வைத்து திட்டிய வாசிம் அக்ரம்..என்னதான் ஆச்சு. வைரல் வீடியோ..

ACTOR SUNNY LEONE, THEFT, PAN DETAIL, LOAN, சன்னி லியோன், பாலிவுட் நடிகை

மற்ற செய்திகள்