'2000 ரூபாய்' நோட்டை அச்சடிப்பதை நிறுத்திட்டோம்'...'ரிசர்வ் வங்கி' எடுத்த முடிவு'...அதிரடி காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

'2000 ரூபாய்' நோட்டை அச்சடிப்பதை நிறுத்திட்டோம்'...'ரிசர்வ் வங்கி' எடுத்த முடிவு'...அதிரடி காரணம்!

சமீபத்தில் ஏடிம் மையத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏன் வரவில்லை என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்,  2 ஆயிரம் ரூபாய் தாள்களின் புழக்கம் குறைந்திருப்பதற்கான காரணம் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல் கேட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி,  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் அதற்கான விளக்கத்தையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் காரணமாக சுமார் 354 கோடி எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை படிப்படியாக குறைந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 2017-18-ஆம் நிதியாண்டில் சுமார் 11 கோடி ‌எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், நடப்பு நிதி ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய்‌நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை.

இதனிடையே கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பதற்காக உயர் மதிப்புள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது வரவேற்கத் தகுந்த ஒன்று என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும் உயர் மதிப்புள்ள நோட்டுகள் திடீரென செல்லாது என அறிவிப்பதை விட இதுபோன்று நோட்டுகள் அச்சடிப்பதை படிப்படியாக குறைத்தால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

RBI, BLACK MONEY, RTI, RESERVE BANK OF INDIA, RS 2, 000 NOTES