நாட்டையே 'உலுக்கிய' விஷவாயு 'கசிவு'... ஸ்டைரீன் வாயுவின் 'ஆபத்துகள்' என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாவிசாகப்பட்டினம் ஆலையில் இருந்து இன்று காலை கசிந்த விஷ வாயு மூலம் அப்பகுதியிலுள்ள பலர் அந்த வாயுவை சுவாசித்ததையடுத்து பொது இடங்களில் மயங்கி விழுந்தனர். மேலும் சிலர் உயிரிழக்கவும் செய்தனர்.
இந்நிலையில், அந்த ஆலையிலிருந்து கசிந்த ஸ்டைரீன் என்ற விஷ வாயு, மிக எளிதில் ஆவியாக கூடிய திரவ நிலையில் இருந்து சேமிக்கப்படுகிறது. இந்த ஸ்டைரீன் என்பது சில நேரத்தில் நிறமற்றதாகவும், சில சமயங்களில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். உணவு வைக்கும் பாத்திரங்கள், மேஜை விரிப்புகள் போன்றவற்றிற்கான பிளாஸ்டிக் தயாரிப்பில் ஸ்டைரீன் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்டைரீன் கலந்த காற்றை மனிதர்கள் சுவாசிக்கும் போது மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல், இருமல் போன்றவை ஏற்படும். அதிக அளவில் இதனை சுவாசிக்கும் போது வாந்தி, மயக்க ஏற்படும். மேலும் சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரித்து கோமாவிற்கு செல்லவும் வழி வகுக்கும். ரத்தப்புற்றுநோய், நிணநீர்ப்புற்றுநோய் போன்றவற்றிற்கும் ஸ்டைரீன் வாயு காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.