'வாக்சின் போட்டாச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லல...' வெறும் 15 நிமிஷத்துக்குள்ள மொத்தம் 'மூணு டோஸ்' போட்ட பெண்மணி...! - ஷாக் ஆன கணவர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் தடுப்பூசி மையம் ஒன்றில் பெண் ஒருவருக்கு 15 நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேப் பகுதியில் மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த்நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்று உள்ளார்.
அந்த தடுப்பூசி மையத்தில் அவருக்கு 10 முதல் 15 நமிடங்களுக்குள் 3 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
தடுப்பூசி நடைமுறைகள் குறித்து அறியாத அந்த பெண்மணியும் அடிக்கடி ஊசிப் போடுவதை குறித்து எந்த கேள்வியும் கேட்கவில்லை.
ஊசி போட்டுவிட்டு வெளியே வந்தபின் தனது கணவரிடம் 3 முறை ஊசி போட்டதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாநகராட்சி ஊழியர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மாநகராட்சியில் பணிபுரிவதால் இதுபற்றி புகார் ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த பெண்ணின் கணவர், 'என் மனைவி முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக தடுப்பூசி மையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து 3 ஊசிகள் போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திய பின் அவருக்கு காய்ச்சல் இருந்தது. ஆனால், மறுநாள் காலையில் காய்ச்சல் குறைந்து விட்டது. இப்போது அவர் நன்றாக உள்ளார்' என தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரே கூறும்போது, 'மருத்துவகுழுவினர் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரை பரிசோதனை செய்த நிலையில் அந்த பெண்மணி நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளோம் என கூறினர்
மற்ற செய்திகள்