VIDEO: எதுக்குங்க 'இப்படி' போட்டு அடிக்குறீங்க...? அப்படி 'என்ன' பண்ணினாரு...? 'அரண்டுப்போன மக்கள்...' - எகிறி எகிறி 'டிரைவரை' அடித்து துவைத்த இளம்பெண்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் ஓட்டுநர் ஒருவரை பெண் அடித்த சம்பவத்தால் டிவிட்டரில் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கார் ஓட்டுனர் ஒருவரை பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவம் அவாத் பகுதி போக்குவரத்து சிக்னல் அருகே பாத சாலையில் நடந்துள்ளது. அந்த ஓட்டுநர் ஓட்டிக்கொண்டு வந்த கார் தன் மீது மோதியதாக கூறி போக்குவரத்து காவலர் முன்னிலையிலேயே அந்த பெண் எகிறி எகிறி தாக்கியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இடைவெளி விடாமல் தொடர்ந்து கார் ஓட்டுனரை பாய்ந்து பாய்ந்து தாக்கிக் கொண்டே இருந்தார்.
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021
அதோடு, வீடியோவில் அந்த கார் ஓட்டுநர் எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த ஓட்டுனரின் செல்போனையும் அவரிடமிருந்து எடுத்து கீழே போட்டு அந்த பெண் உடைத்துள்ளார். அங்கிருந்த பொதுமக்களில் சிலர் அப்பெண்ணை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
Even the Person who came to Save the Cab Driver was Assaulted in these undated Viral Videos.
She can be heard saying the Car Hit her pic.twitter.com/CXuUoBaLUj
— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021
இந்த சம்பவம் குறித்து இன்னும் முழு பின்னணி தெரியாத நிலையில், #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Lucknow Girl issue full video to start 👇 watch please... !!!
लड़के की गलती कहीं नजर नही आ रही है, लड़की उसे पिट रही है, बदतमीजी की सारे हदें पार की चुकी है। खबर के मुताबिक़ @Uppolice लड़के को गिरफ़्तार किये है, Why ???🤔
— Saeed Anwar (@SaeedAnwar__) August 2, 2021
மற்ற செய்திகள்