இதோ 'இந்தியாவுக்கு' எங்க 'டீம்' கிளம்பிட்டாங்க...! அன்னைக்கு இந்தியா செஞ்ச 'உதவிய' நாங்க மறக்க மாட்டோம்...! - விரைந்தது இஸ்ரேல் நிபுணர்கள் குழு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இஸ்ரேல் நிபுணர்கள் குழு இந்தியா வருகை தருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், முதல் அலையை விட இரண்டாம் அலையில் அதி தீவிர தன்மையுடன் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் இல்லாமலும் தடுமாறுகிறது.
இந்த நிலைமை எல்லா மாநிலங்களிலும் ஏற்படாதவண்ணம் மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் கடுமையாக போராடி வருகின்றனர்.
மேலும், பெரும்பாலான வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலும், அதிவேகமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளை மிகவும் எளிதாக தயாரிக்கவும் இஸ்ரேல் நிபுணர்கள் குழுக்கள் இந்தியா விரைகின்றன.
இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மால்கா கூறும்போது, 'இந்தியாவில் கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத அளவில் பரவி வருகின்றது. இதனால் நாங்கள் இந்தியாவுக்கு நிபுணர்கள் குழுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இந்த நிபுணர் குழு உறுப்பினர்கள் விரைவாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், மிகவும் எளிதாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயாரித்தல் போன்றவற்றிற்கு உதவுவார்கள்.
கொரோனா முதலில் பரவியப்போது, எங்களுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க உதவி செய்ததை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்.
இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான நட்புணர்வு உள்ளது. உயிர்காக்கும் இந்திய நேரத்தில் எதை வேண்டுமென்றாலும் நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்' என்றார்.
மற்ற செய்திகள்